இந்திய திரையுலகின் ஜாம்பவான் இசையமைப்பாளராகவும், இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளை்யராஜா. சுமார் 50 ஆண்டுகளாக தனது இசையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. 

Continues below advertisement

ரஜினிக்கு குவியும் கண்டனம்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, முத்தரசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இவர்களுடன் இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த நிலையில், முதலமைச்சர், கூட்டணி கட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்ற அரசு நடத்திய விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement

பீர், ஹீரோயின்கள் கிசுகிசு:

நடிகர் ரஜினிகாந்த் இளையராஜாவுடன் சுமார் 40 ஆண்டுகாலத்திற்கும் மேலாக நண்பராக உள்ளார். ஜானி படத்தின் படப்பிடிப்பின்போது இளையராஜா அரை பாட்டில் பீர் அடித்துவிட்டு ஆட்டம் போட்டார் என்றும், மகேந்திரன் அந்த பாடலில் சார் என்று கூறியபோது சார் இருங்க என்று கூறிவிட்டு கிசுகிசு கேட்பார் குறிப்பாக ஹீரோயின்கள் பத்திதான் கிசுகிசு கேட்பார் என்று ரஜினிகாந்த் பேசினார். ரஜினியின் பேச்சுக்கு இளையராஜாவும் நடக்காதது எல்லாம் அடித்துவிடுகிறார் என்று பதில் அளித்தார். 

அரசு விழாவில் இப்படி பேசலாமா?

ரஜினி இரண்டு நாட்களுக்கு முன்பு பீர் அடிச்சுட்டு ஆட்டம்போட்டீங்களே.. அதை சொல்றேனு சொன்னாரு என்று இளையராஜா கூறிய பிறகே ரஜினி இவ்வாறு பேசினார். ரஜினியும், இளையராஜாவும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வில் அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் பங்கேற்ற நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் இவ்வாறு பேசியது சரியல்ல என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். அரசு விழாவில் இவர்கள் அரட்டை அடித்ததை எல்லாம் பேசிக் கொள்ளலாமா? என்று ரஜினியை பலரும் விமர்சித்து வருகின்றனர். 

ரஜினிகாந்த் பேச்சுக்கு என்று எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். அவர் மிகவும் சுவாரஸ்யமாகவும், ரசிக்கும் வகையிலும் பேசும் ஆற்றல் கொண்டவர். ஆனால், சமீபகாலமாக அவர் மிகவும் வெளிப்படையாக சிலவற்றை பேசி வருவது ரசிக்கும் வகையில் இருந்தாலும் இப்படி வெளிப்படையாக பேசலாமா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறது. கூலி இசை வெளியீட்டு விழாவிலும் செளபின் சாஹிர் பற்றி, அனிருத் பற்றி அவர் பேசியதும் அப்படித்தான் அமைந்தது. ரஜினி மட்டுமின்றி இளையராஜாவும் ரஜினியுடன் சேர்ந்து பேசியது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. 

மேலும், மேடையில் பேசிய ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசினார். பழைய, புதிய எதிர்க்கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் சவாலாக திகழ்கிறார் என்றும் பேசினார். ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2ம் பாகத்தில் நடித்து வரும் சூழலில், கமல்ஹாசனுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இது இந்திய திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.