TN Assembly vote of confidence : விஜய் ஆட்சி தப்பிக்குமா.? சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்.? இதோ வழிமுறை
Tamil Nadu Legislative Assembly vote of confidence : விஜய் தலைமையிலான தவெக ஆட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது. எனவே நம்பிக்கை ஓட்டெடுப்பு எப்படி நடைபெறும் என்பதை தற்போது பார்க்கலாம்.

தவெக ஆட்சி தப்பிக்குமா.? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கையை தொட முடியாத காரணத்தால் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களோடு முதல் ஆளாக தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தது. அடுத்தாக கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்தது.
இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எண்ணிக்கையை தவெக பெற்றது. இதனையடுத்து ஆளுநர் முதலமைச்சராக விஜய்க்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். இதனையடுத்து இன்றுக்குள் (13ஆம் தேதி) பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை சட்டசபையில் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.எனவே சட்டசபையில் விஜய் ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும் என்பதை பார்க்கலாம்.
நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்.?
- சட்டசபையில் இன்று அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை (தவெக) ஆளும் கட்சி சார்பில் ஒருவர் முன்மொழிய வேண்டும். இதனையடுத்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யும் ஆதரவு கோரி சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுவார். அதில் முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றுவார்.
- அரசு கொண்டுவரும் தீர்மானத்தில் எதிர்க்கட்சியினரும் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் உரையாற்றுவார்கள்.
- அடுத்தாக அந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
- அப்போது தவெக ஆட்சி மீது நம்பிக்கை இல்லையென எதிர்க்கட்சியினர் யாராவது எண்ணிக் கணிக்கும் டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், அந்த வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிடுவார்.
- இதனையடுத்து அனைத்து எம்எல்ஏக்களும் உடனடியாக அவைக்குள் வரவைக்கும் வகையில் 3 முறை மணியோசை ஒலிக்கப்படும்.
- அவையின் அனைத்து கதவுகளும் மூடப்படும். பின்னர் சட்டசபை செயலாளர், டிவிஷன் வாக்கெடுப்பை நடத்துவார்.
- சட்டசபையில் மொத்தம் 6 பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் சட்டசபை செயலாளர், தீர்மானத்தை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும், நடுநிலை வகிப்போரையும் தனித்தனியாக எழுந்து நிற்கக் கூறுவார்.
- அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கையையும், எதிர்ப்போரின் எண்ணிக்கையும் கணக்கிட்டு சபாநாயகரிடம் செயலாளர் வழங்குவார்.
- இறுதியாக தவெக ஆட்சிக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பார். இதில் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றுவிட்டால் அரசு தனது பணியை தொடர்ந்து நடத்தும். அல்லது தீர்மானம் ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், அது ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்படும்.
Before You Go
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
ட்ரெண்டிங் செய்திகள்






















