நெருங்கும் தேர்தல்- தொகுதி ஒதுக்கீடு தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதே நேரம் அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு கூட்டணி, வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் வகையில் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் 26 கட்சிகளை கொண்ட கூட்டணியை உருவாக்கியுள்ளது. இதில் 21 கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வகையில் சீட் வழங்கப்படவுள்ளது.

திமுக கூட்டணியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக.,இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு கடந்தமுறை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

26 கட்சிகளோடு கூட்டணி

இந்த முறை திமுக கூட்டணியில் தே.மு.தி.க.,மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ.,  மனிதநேய ஜனநாயக கட்சி,  முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. எனவே இந்த கட்சிகளுக்கும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையில் திமுக உள்ளது. எனவே கடந்தமுறையைவிட இந்தமுறை தனது தொகுதிகளை குறைத்துக்கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் ஆதி தமிழர் பேரவை,மூவேந்தர் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கழகம் போன்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக மட்டும் 156 இடங்களில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 78 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது. 

அதே நேரம் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு சில கட்சிகளு திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்குகிறது. அந்த வகையில் 18 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டிபோடவுள்ளன. எனவே திமுகவின் உதயசூரியன் சின்னம் மட்டும் இந்த தேர்தலில் 173 தொகுதிகளில் களம் இறங்கும் என கூறப்படுகிறது. 

திமுக கூட்டணி உத்தேச பட்டியல்

  • தி.மு.க. -154
  • காங்கிரஸ் 28
  • தேமுதிக 8
  • விசிக -7
  • இ.கம்யூ -6
  • மா.கம்யூ -6
  • மதிமுக -5
  • தமிழக வாழ்வுரிமை கட்சி - 2
  • கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி -2
  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2
  • மனிதநேய மக்கள் கட்சி -2
  • எஸ்.டி.பி.ஐ. -2
  • மக்கள் நீதி மய்யம் -2
  • மனிதநேய ஜனநாயக கட்சி -1
  • முக்குலத்தோர் புலிப்படை 1
  • முக்குலத்தோர் முன்னேற்ற கழகம் -1
  • கொங்கு இளைஞர் பேரவை - 1
  • தமிழர் தேசம் கட்சி -1
  • கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் -1
  • அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் 1 
  • ஆதி தமிழர் பேரவை 1
  • மக்கள் விடுதலை கட்சி -1