நெல்லையில் உள்ள தனியார் ஹோட்டலில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி 24 ஆண்டுகளை கடந்த 25ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்காக டிசம்பர் 15ஆம் தேதி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் புதிய தமிழகம் கட்சியின் 25வது ஆண்டு விழா மாநாடு மற்றும் இந்து விழிப்புணர்வு மாநாடு நடைபெறும் என்று தெரிவித்தார், அதேவேளையில் புதிய தமிழகம் கட்சி அடிப்படை கொள்கையில் இருந்து தற்போது இந்துத்துவா கொள்கையை நோக்கி பயணிப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணசாமி, நான் இந்துக்களை இந்தியர்களாக பார்ப்பதாக தெரிவித்தார்.


கோவை: மாணவிகளுக்கு டபுள் மீனிங் வாட்ஸ் ஆப் சாட் - பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்



 


பெண்ணின் கழுத்தில் 7.5 செ.மீ தையல் ஊசி - வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்


தமிழகத்திலுள்ள 35,000 இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களின் சொத்துக்கள், நிலங்கள், நகைகளை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 5 லட்சம் டன் கோயில் நகைகள் உருக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்த ஓய்வுபெற்ற இரண்டு அல்லது மூன்று நீதிபதி தலைமையில் குழு அமைத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் அரசியல் சாயம் கூடாது என்று வலியுறுத்தினார்.


மாணவிகளின் பிரச்னைகளை பள்ளிகள் மூடி மறைக்க கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி


தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியிருக்கும் அதேவேளையில் கொரோனா பாதிப்பு உள்ள இந்த காலகட்டத்தில் 2500 ரூபாய் முதல் 4 ஆயிரம் வரை தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார், அதேபோன்று விவசாயிகள் தற்போதைய வடகிழக்கு பருவ மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் நீண்ட நாட்களாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராடி வரும் நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், அதேவேளையில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக முடிவுகளை மத்திய அரசு எடுக்காமல் நன்கு ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.


தடுப்பூசி போடாவிட்டால் டாஸ்மாகில் மது கிடையாது - திண்டுக்கல் டாஸ்மாக் நிர்வாகம் கெடுபிடி