தமிழகத்தில் மக்கள் ஆசி யாத்திரை மேற்கொண்டிருக்கும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று இரவு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வந்தார்.  அவருடன் ,தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் , சி.பி ராதாகிருஷ்ணன்  உள்ளிட்டோர் வந்தனர். கட்சினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்  பாஜக நிர்வாகிகள் பலரும் பேசினர். 




சிபி ராதாகிருஷ்ணன் பேசுகையில்...


‛‛தமிழகத்தில் தாமரை மலரப்போகும் நாள் உருவாக போகிறது. அந்த நாள் வரப்போகிறது என்பதற்கு தான் திமுகவில் இருந்த வி.பி.துரைசாமி , ராமலிங்கம் வந்துள்ளார்கள். அதைப்போலவே நாம் ஒரு நாளை உருவாக்க போகிறோம். மதுரையில் இருந்து மு.க.அழகிரியும் பா.ஜ.க வில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கி காட்டுவோம். இன்று 4 இடங்களை பெற்றுள்ள நாம் 140 இடங்கள் பெறும் வரை அயராது உழைக்க வேண்டும்,’’ என பேசினார். 


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், தற்போதைய முதல்வரான ஸ்டாலினின் சகோதரரான மு.க.அழகிரியை திமுகவில் இணைக்கப் போவதாக பாஜக தரப்பில் பொதுவெளியில் அறிவித்திருக்கும் நிலையில், நீண்ட நாட்களாக இருந்து வரும் இந்த கிசுகிசுக்க உயிர் கிடைத்திருக்கிறது. அழகிரியை பாஜகவில் இணைய பாஜக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதை தான் சி.பி.ஆர்.,யின் பேச்சு பட்டவர்த்தனமாக காட்டுகிறது. ஆனால் அழகிரி தொடர்ந்து அதிலிருந்து நழுவி வந்தாலும், வருங்காலத்தில் அதே நழுவலை கடைபிடிப்பாரா அல்லது ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுந்திருந்து பார்க்கலாம். 




தொடர்ந்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், 


‛‛75 ஆண்டுகள் அருந்ததியர் சமுதாயத்திற்கு இருந்த மிகப்பெரிய குறையை பாரத பிரதமர் மோடி பூர்த்தி
செய்துள்ளார். இன்று நாற்பத்தி மூன்று  அமைச்சர்கள் பதவி ஏற்று இருந்தாலும் அதில் வைரமாக நம் முருகன் இருக்கிறார். அமைச்சராக பதவி பெற்று இன்று அவரது சொந்த மாவட்டமான நாமக்கல் வந்திருக்கிறார் இது சரித்திரத்தில் மறக்க முடியாத நாள். மக்களுக்கும் அரசுக்கும் கொஞ்சம் கூட இடைவெளி இருக்க கூடாது என நினைக்க கூடிய அரசு மோடி அரசு ஏழு ஆண்டுகளாக அப்படித்தான் நடந்து வருகிறது. பொதுவாக அமைச்சர்களை டெல்லியில் சென்றுதான் பார்க்க வேண்டும் அதுவும் திமுக அமைச்சர்கள் 4 புரோக்கர்களை வைத்து நான்கு நாள் காத்திருந்து பார்க்க வேண்டும் ஆனால் நமது அமைச்சர் பொறுப்பு ஏற்றவுடன் டெல்லியில் இருந்து புறப்பட்டு நேரடியாக  மக்களை சந்திக்க நேரில் வந்து இருக்கிறார். மற்ற கட்சிகளில் சொந்தக்காரர்களை மட்டுமே அமைச்சர் ஆக்குவர். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் தான் அமைச்சர். மக்கள் ஆசி யாத்திரையில் அமைச்சர் எல்.முருகன்  2 நாட்களில் 100கும் மேற்பட்ட  பகுதி மக்களை நேரில்  ஆசி பெற  சந்தித்து உள்ளார். நான்கு முக்கிய துறைகளின் அமைச்சராக நேரடியாக மக்களை சந்தித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி 8 லட்சம் கோடி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளார் மத்திய அமைச்சராக முருகன் இருப்பதால் அந்த எட்டு லட்சம் கோடி இரட்டிப்பாக மேலும் நிதி ஒதுக்கப்படும்,’’ என அண்ணாமலை பேசினார்.




இதைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசுகையில், 


‛‛43 மத்திய அமைச்சர்களில் 12 பேர் அருந்ததிய சமுதாயத்தினர். 8 பேர் மலை வாழ் சமூகத்தினர். பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத பட்டியல் இனத்தை சேர்ந்த என்னை அமைச்சர் ஆக்கி நாமக்கல் மக்களுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளார் பிரதமர் மோடி. மக்கள் ஆசி யாத்திரை பயணத்தில் மக்கள் தங்கள் மேலான ஆதரவை தனக்கும் பிரதமர் மோடிக்கும் தரவேண்டும் ஆதரவை தந்து நல்லாட்சி நிலைத்திட செய்ய வேண்டும்,’’ என
 மத்திய அமைச்சர் L முருகன் பேசினார்.