மேலும் அறிய

35% மக்கள் முட்டாள்களா? வாக்காளர்களை நேரடியாக தாக்கி பேசிய முன்னாள் அமைச்சர் காந்தி!

"காஞ்சியில் முன்னாள் அமைச்சர் காந்தி பரபரப்பு பேட்டி, தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைத்தார்?"

காஞ்சிபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் உள்ள 1,000 கால் மண்டபத்தில், தனது சொந்தச் செலவில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வளர்ச்சிப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், முன்னாள் அமைச்சர் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டமன்ற நடைமுறைகள், தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் குறைபாடுகள் மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் குறித்துப் பல கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.

லஞ்ச ஒழிப்பு சோதனையும் சட்டமன்ற கேள்விகளும்

சட்டமன்றப் பேரவையில் மக்கள் சார்ந்த பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து அதிக அளவில் கேள்விகளை எழுப்பி வரும் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை அரசியல் ரீதியாக அச்சுறுத்தும் ஒரே நோக்கத்துடனேயே லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் ரீல் தளபதி ஆட்சிக் காலத்திலிருந்தும், ரியல் தளபதி ஆட்சிக் காலத்திலிருந்தும் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து கிடப்பிலேயே போடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜனநாயக முறைப்படி சரிவர நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

110 நாள் தவெக ஆட்சி: ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை என சாடல்

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் காந்தி, தமிழகத்தில் தற்போது நடைபெறும் 110 நாட்கள் தவெக ஆட்சி என்பது வெறும் ‘ரீல் ஆட்சி’யாகவே இருக்கிறது என்று சாடினார். முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்குத் தங்கள் ஆட்சியின் ஸ்டிக்கர்களை ஒட்டி விளம்பரம் தேடிக் கொள்வதைத் தவிர வேறு சாதனை எதுவும் இல்லை என்றார். 

மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் ஜே.கே. டயர் தொழிற்சாலை குறித்து அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கே தெரியவில்லை என்றால் கூடப் பரவாயில்லை, ஆனால் தொழில்துறை அமைச்சருக்கே அதுகுறித்த புரிதல் இல்லாமல் இருப்பது இந்த ஆட்சியின் அவலநிலையைத் தெளிவுபடுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் லாபத்தில் இயங்கி வந்த கோ-ஆப்டெக்ஸ் கைத்தறித் துறையில் 6 விற்பனை நிலையங்களுக்கு மூடுவிழா கண்டதுதான் இந்த ஆட்சியின் முக்கிய சாதனை என்றும் எள்ளலாகக் கூறினார்.

வாக்காளர்கள் குறித்துப் பேசி கிளப்பிய சர்ச்சை

செய்தியாளர் சந்திப்பின் இறுதிக் கட்டத்தில், மாநிலத்தின் வாக்காளர்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் காந்தி, சுமார் 1 கோடித் 75 லட்சம் மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்றும், அதில் 35 சதவீதம் பேர் முட்டாள்தனமாக வாக்களித்ததாலேயே இந்த ஆட்சி அமையக் காரணமாகிவிட்டது என்றும் பேசினார். வாக்காளர்களை நேரடியாக விமர்சிக்கும் வகையில் அமைந்த அவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சு, தற்போது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!
Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
“ஒரு வாரத்துக்கு 4 கொலைகள்... புதுச்சேரி கொலைச்சேரியாகிவிட்டது” - ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
“ஒரு வாரத்துக்கு 4 கொலைகள்... புதுச்சேரி கொலைச்சேரியாகிவிட்டது” - ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget