(Source: ECI/ABP News/ABP Majha)
Erode East By Election: “ஓபிஎஸ், டிடிவியால் அதிமுகவின் வாக்குகள் சிதறாது” - கே.ஏ.செங்கோட்டையன் அதிரடி!
Erode East By Election: கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை இதனை யாராலும் தகர்க்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டியில் கூறியுள்ளார்.
Erode East By Election: கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை இதனை யாராலும் தகர்க்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டியில் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலான அணியின் தேர்தல் பணிக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை. இதனை யாராலும் தகர்க்க முடியாது. அதிமுகவின் வாக்குகள் (ஓ. பன்னீர் செல்வம் அணி, டிடிவி தினகரன் அணி) சிதறிவிடும் என்பதெல்லாம் இந்த மாவட்டத்தில் செல்லுபடியாகாது. மேலும், வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் நாடகள் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நாங்கள் உரிய பதிலை அளித்திருக்கிறோம். மேலும் இந்த இடைத்தேர்தல் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்" என அவர் கூறியுள்ளார்.