நெருங்கும் தமிழக தேர்தல்- சூடு பிடிக்கும் அரசியல் களம்
தமிழகசட்டமன்றதேர்தலுக்குஇன்னும்சிலவாரங்களில்தேதிஅறிவிக்கப்படவுள்ளது. இதன்காரணமாகதேர்தல்பணியைஅரசியல்கட்சிகள்தொடங்கியுள்ளது. அதிலும்அதிமுககூட்டணிவேகவேகமாகதேர்தல்கூட்டணியைஉறுதிசெய்துவருகிறது. அந்தவகையில்பலம்வாய்ந்ததிமுககூட்டணியைவீழ்த்தஎதிர்ப்புவாக்குகள்பிரிந்துசெல்லாமல்ஒருங்கிணைக்கும்வகையில், பாஜகவைதங்கள்அணியில்இணைத்த அதிமுக, அடுத்தாகபாமகவையும்இணைத்துள்ளது. விரைவில்தேமுதிகவையும்அதிமுககூட்டணியில்இணைக்கதிட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில்தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்
பாஜகமூத்ததலைவரும், மத்தியஅமைச்சருமானஅமித் ஷா திருச்சி வந்து சென்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகஇணைந்தது. கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அடுத்தாக அமமுகவை இணைக்க தொடர்ந்து திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதேபோலதேமுதிகவையும்கூட்டணியில்இணைக்கதிட்டமிடப்பட்டுவருகிறது. இதற்கானபேச்சுவார்த்தைஒருபக்கம்நடைபெற்றுவரும்நிலையில், தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முடிந்த சில நாட்களுக்குள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இறுதிவடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
23ஆம் தேதிக்குள் அதிமுக கூட்டணி இறுதி வடிவம்
அந்த வகையில், அமமுக, தேமுதிகவை இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை வலுவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேச்சுவார்த்தையில் உள்ள கட்சிகளிடம் இருந்து சாதகமான பதில்களை கொடுத்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. தொகுதிப்பங்கீடு உள்ளிட்ட அம்சங்களின் உடன்பாட்டை ஏற்படுத்தி முக்கிய கட்சிகளை வரும் 23ம் தேதிக்குள் கூட்டணியில் இணைக்க தீவிரப்பணியானதுதொடங்கியுள்ளது. கூட்டணி இறுதிவடிவம் பெற்ற உடன் வரும் 23ம் தேதி தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டணிக்குள் அமமுக, தேமுதிக கட்சிகள் வரும்பட்சத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் பிரதமருடன் வரும் 23ம் தேதி மேடை ஏறுவார்கள் என தகவல்வெளியாகியுள்ளது.
நாளை முக்கிய பேச்சுவார்த்தை
வருகிற23ம் தேதிக்குள் கூட்டணி இறுதிவடிவம் பெறவில்லை என்றால் 28ம் தேதிக்குள் இறுதிவடிவம் பெறும் வகையில் ஏற்பாடுநடைபெற்றுவருவதாகஅதிமுகவட்டாரதகவல்வெளியாகியுள்ளது. இந்தநிலையில்நாளைகாலைஎடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக குழுவினர் சந்தித்துபேசவுள்ளனர். ஜனவரி23 ம் தேதி பிரதமர் மோடிதமிழகம் வருகை தர உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் நாளைநடைபெறும்சந்திப்புமுக்கியத்துவம்பெற்றுள்ளது.
