தமிழகத்தில் வாக்குப்பதிவிற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆகிய தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் வேலை இழந்தனர்

இப்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதால் ரூபாய். 300500 கோடி அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

வரும் காலங்களில் அனைவருக்கும் வேலை என்ற நிலையை உருவாக்குவோம் pic.twitter.com/muZ6npCARI
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 2, 2021

இந்த நிலையில், முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், "தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் வேலை இழந்தனர். இப்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதால் ரூபாய் 3,00,500 கோடி அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். வரும் காலங்களில் அனைவருக்கும் வேலை என்ற நிலையை உருவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.