TN Assembly EPS: சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கைக்கு எதிராக அமர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

எடப்பாடி பழனிசாமி தர்ணா:

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம்நடைபெற்றது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் சிவசங்கர் சொன்ன கருத்துக்கு, அதிமுகவின் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடு.. நடவடிக்கை எடு.. ஓரவஞ்சனை செய்யாதே” என அவர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து சபாநாயகர் இருக்கையையும் சூழந்து முழக்கமிட்டனர்.

Continues below advertisement

அதிமுக வெளிநடப்பு:

அதிமுக உறுப்பினர்கள் இருக்கைக்கு திரும்பாவிட்டால், அவை காவலர்கள் வரவழைக்கப்படுவார்கள் என சபாநாயகர் எச்சரித்தார். ஆனால், அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை காவலர்கள் அழைக்கப்பட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் சட்டப்பேரவை வளாகத்தில் நின்றபடி, அரசுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்:

இதனிடையே, சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தவெக உடன் கூட்டணி வைக்கும் முயற்சியில் இருப்பதால் அவர்களுக்கு ஆதரவாக எடப்பாடி செயல்படுகிறார். ஒருவேளை அந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்தாலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள். அதிமுகவினர் பாதிக்கப்பட்டு இருந்தால் கூட எடப்பாடியிடமிருந்து இப்படியோரு போர்க்குரல் வந்திருக்குமா? என தெரியவில்லை. சட்டப்பேரவையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக உறுப்பினர்கள் இன்று வந்துள்ளனர். சரியான கூட்டணி அமையாததால் தான் இப்படி நடந்து கொள்கின்றனர். அவர்கள் மகா கூட்டணி, மெகா கூட்டணி அமைத்தாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள்” என கடுமையாக விமர்சித்தார்.