TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
TVK On Seeman: பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக சீமான் பேசுகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக, பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

TVK On Seeman: ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தனியார் பள்ளிகளுக்கான அனுகூலமாக பார்கக் கூடாது என, பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுத்தோம் - ராஜ்மோகன்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகனிடம், தனியார் பள்ளிக்கான அமைச்சரா நீங்கள், அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கயில், “தனியார் பள்ளிகள் ஒவ்வொரு சான்றிதழ்க்கும் 25 லட்சம், 401 லட்சம் என பணம் கொடுத்ததை தவிர்த்து, பல்லாயிரம் கோடி ஊழலை தவிர்த்ததை தனியார் பள்ளிக்கான அனுகூலமாக பார்க்கக் கூடாது. அந்த பார்வை தவறு. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக தான் பார்க்க வேண்டும். மற்றபடி அரசு பள்ளிகள் தான் என்னுடைய கண்கள். அவற்றிற்கு தான் எனது முக்கியத்துவம். நான் அமைச்சரானது போட்ட முதல் கையெழுத்தே, அரசுப் பள்ளிகளில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகளில் பூட்டக்கூடிய கதவு வசதி இருக்க வேண்டும் என்பதற்கானது தான்.
பெரும் முதலாளிகளுக்காக சீமான் பேசுகிறாரா? - ராஜ்மோகன்
தொடர்ச்சியாக அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறேன். சொன்ன தேதியில் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டோம். வெயிலின் தாக்கத்தை உணர்ந்து கோடைகால விடுமுறையை நீட்டித்தோம். எனவே, தனியார் பள்ளிகளில் நடந்த பல்லாயிரம் கோடி ஊழல், அதற்கு எதிராக நாங்கள் பேசுவதை அவர்களுக்கான அனுகூலமாக பார்ப்பது தவறு. இந்த ஊழலில் பெரும் முதலைகள் எல்லாம் சம்மந்தப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் வெளிவருவதை பிடிக்காமல், அந்த பெரும் முதலைகளுக்கு ஆதரவாக சீமான் பேசுகிறாரோ என்ற எண்ணம் வருகிறது” என ராஜ் மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சீமானின் குற்றச்சாட்டுகள் என்ன?
முன்னதாக சீமான் வெளியிட்டு இருந்த அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குத்தான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா? உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?” என காட்டமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
முதல்முறையாக சீமானுக்கு பதிலடி
முதலமைச்சர் விஜய் கட்சி தொடங்கியபோது வரவேற்று பேசிய சீமான், திராவிட கொள்கைகளை பின்பற்றுவோம் என அறிவித்ததும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். குறிப்பாக விஜயை ஒருமையில் பேசியும், அவரது செயல்பாடுகளை தரம் தாழ்ந்து விமர்சித்து வந்தார். ஆனால், ஒருபோதும் தவெக தரப்பில் இருந்து சீமானுக்கு எந்தவித பதிலடியும் தராப்படமாலே இருந்தது. இந்நிலையில் தற்போது தான் முதல்முறையாக சீமானின் விமர்சனத்திற்கு தவெக தரப்பில் இருந்து அமைச்சர் ஒருவரே பதிலடி தந்துள்ளார்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்























