மேலும் அறிய

Edappadi Palaniswami: திடீரென கண் கலங்கிய எடப்பாடி பழனிசாமி.. நெகிழ்ந்த தொண்டர்கள்!

2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தொகுதி வாரியாக பம்பரமாக சுழன்று மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படத்தின் 225வது நாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிலையில், அப்படத்தைப் பார்த்து அவர் கண்கலங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பம்பரமாய் சுழலும் எடப்பாடி பழனிசாமி

2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முன்கட்ட பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தொகுதி வாரியாக பம்பரமாக சுழன்று மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மக்களை சந்தித்து மீண்டும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்கு சேகரித்து வருகிறார். 

அதேபோல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நலத்திட்டங்கள் செய்வோம் என்பதையும் அவர் வாக்குறுதிகளாக அளித்து வருகிறார். இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது. கள நிலவரத்தைப் பார்க்கும்போது இந்த தேர்தல் கடும் போட்டி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆரை பார்த்து கண் கலங்கிய இபிஎஸ்

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் நடிப்பில் 1975ம் ஆண்டு வெளியான இதயக்கனி படத்தின் 225ம் நாள் ரீ-ரிலீஸ் வெற்றி விழாவில் கலந்து கொண்டார். இந்த படத்தில் பண்டரி பாய், ராதா சலுஜா, ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், எஸ்.வி.சுப்பையா, ராஜசுலோச்சனா, வெண்ணிற ஆடை நிர்மலா என பலரும் நடிக்க ஜெகநாதன் இயக்கியிருந்தார். இப்படம் இன்றளவும் எம்ஜிஆர் ரசிகர்களாலும், அதிமுக தொண்டர்களாலும் கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, “உழைக்கும் மக்களே... உடன்பிறப்புகளே... புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே...! நம் உயிர்நிகர் #புரட்சித்தலைவர்_எம்ஜிஆர் அவர்கள் நடிப்பில் வெளிவந்து, சத்யா மூவீஸ் தயாரிப்பில்,  தமிழ்நாட்டின் Industry Hit ஆகி,  இந்திய அளவிலும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து, சர்வதேச விருதுகளைப் பெற்ற மாபெரும் வெற்றிப் படமாம் #இதயக்கனி தற்போது Re-Release ஆகி, 225 நாட்கள் வெற்றிநடைப் போட்டு வரும் நிலையில், இன்று கழக உடன்பிறப்புகளோடு இணைந்து திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கம் சென்று, 1975-ல் இதயக்கனி வெளியான போது, கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி, பலமுறை படத்தைப் பார்த்து, இளைஞனாக ரசித்து மகிழ்ந்த தருணங்களை அசைபோட்டுக்கொண்டே, #MGR எனும் மூன்றெழுத்து மந்திரத்தின் காலத்தால் அழியாத திரை ஆளுமைமிக்க நடிப்பை ரசித்தேன்.

தலைவர் அவர்களின் படங்கள், எப்போதும் நமக்கொரு நற்பாடத்தைச் சொல்லும். அதேபோல், #இதயக்கனி சொல்லும் சமநீதிச் சமுதாயம் காண, அண்ணா வழி கண்டு நன்மை தேடுவோமாக!” என பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

VK Sasikala: கருணாநிதி சூழ்ச்சி.. ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு.. சசிகலா வேதனை!
VK Sasikala: கருணாநிதி சூழ்ச்சி.. ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு.. சசிகலா வேதனை!
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
மு.க.அழகிரி ஆதரவாளர்கள், செல்லூர் ராஜுவிடம் ஐக்கியம்.. எம்.எல்.ஏ, சீட்டுக் கணக்கு கை கொடுக்குமா?
மு.க.அழகிரி ஆதரவாளர்கள், செல்லூர் ராஜுவிடம் ஐக்கியம்.. எம்.எல்.ஏ, சீட்டுக் கணக்கு கை கொடுக்குமா?
ADMK alliance Vs MK STALIN : யாருக்கு யார் தலைமை என தெரியாமல் ஒரு கூட்டணி.? அதிமுக, பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
யாருக்கு யார் தலைமை என தெரியாமல் ஒரு கூட்டணி.? அதிமுக, பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Surprise Gift: மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
Trump Arab Countries Iran: “மெயின் அடியே இனிமே தான் இருக்கு“; ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்; தாக்குதலில் இணையும் அரபு நாடுகள்.?
“மெயின் அடியே இனிமே தான் இருக்கு“; ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்; தாக்குதலில் இணையும் அரபு நாடுகள்.?
OPS CAR DRIVER: ஓபிஎஸ் டிரைவரை புலம்ப வைத்த நெட்டிசன்கள்.! அறிவாலயத்தில் நடந்தது இது தான்- போட்டுடைத்த ஓட்டுநர்
ஓபிஎஸ் டிரைவரை புலம்ப வைத்த நெட்டிசன்கள்.! அறிவாலயத்தில் நடந்தது இது தான்- போட்டுடைத்த ஓட்டுநர்
Top 10 News Headlines: மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
China Backs Iran: “ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
“ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
Embed widget