கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அ.தி.மு.க.வின் 51வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


கொலை முயற்சி:


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் கடுமையாக உழைத்தார். மேலும், கடுமையான பிரச்னையை சந்தித்தார், அவருக்கு கருணாநிதி அவ்வளவு தொந்தரவு கொடுத்தார்.


அதேபோல எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, ஜெயலலிதாவுக்கு கடுமையான பிர்ச்னையை உருவாக்கினார்.


ஒரு முறை ஜெயலலிதா, பாண்டிச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு சென்னைக்கு திரும்பி வரும்போது, தாம்பரம் விமான நிலையம் அருகே ஜெயலலிதாவின் கார் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்தார்கள்.


இரு தலைவர்களும், சோதனையை சந்தித்துதான் சாதனை படைத்தார்கள். அதேபோல் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, எவ்வளவு பிரச்னைகளை சந்தித்தோம், கொஞ்சம் நஞ்சமல்ல, 


”சீட் கேட்டதே இல்லை”


நான் சாதாரண விவசாயி மகன், கிளை செயலாளர் பதவியிலிருந்து முதலமைச்சர் பதவிக்கு வந்துள்ளேன். ஆகையால் அனைவரின் கஷ்டம் எனக்கு தெரியும். நான் யாரிடமும் சீட் கொடுங்கள் என்று கேட்டதே இல்லை.


சாதாரணமாக இந்த நிலைக்கு வரவில்லை, பல்வேறு பிரச்னைகளை சந்தித்து உங்களின் ஆதரவோடு வந்துள்ளேன். மேலும் இக்கட்சியை எப்படி உடைக்க வேண்டும் என்று  24 மணி நேரமும் திமுக சிந்தித்து கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.




”அண்ணன் ஓபிஎஸ்”


அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று, எதிர்த்து ஓட்டு செலுத்தியவர் அண்ணன் ஓபிஎஸ், இவர் எப்படி விசுவாசமாக இருப்பார். மேலும் ஜெயலலிதாவுக்கு, விசுவாசமாக இருப்பவர் சொல்கிறார், அது பொய். அவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார். அதனால்தான், பொதுக்குழுவில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இனி, மீண்டும் கட்சியில் இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. எவ்வளவு வாய்ப்பு கொடுத்தோம் , வாய்ப்பு கொடுக்கும் போது எல்லாம், ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார். நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


Also Read: Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!