John Britto: விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
John Britto Aadhav Arjuna: தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருவதாக வெளியான தகவல் போலியானது என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

John Britto Aadhav Arjuna: போதைப்பொருள் கடத்தல் தொடர்பான திமுகவின் அபண்டமான குற்றச்சாட்டுகளை, சட்டரீதியாக எதிர்கொள்ள தயார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா மீது குற்றச்சாட்டு
தமிழ்நாடு அமைச்சர் கீர்த்தனா தொடர்பான அவதூறு செய்தியை பரப்பியதாக, யூட்யூபர் மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையில், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் அமலாக்கத்துறையால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியதற்காகவே மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஜான் பிரிட்டோ உங்கள் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?” எனவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
போதைப் பொருள் பணத்தில் ஆட்சி
ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸின் சகோதரர் தான் ஜான் பிரிட்டோ என இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட.அதிமுகவின் குற்றச்சாட்டு உண்மை என்பது போல திமுகவும் கடும் கண்டனத்தை பதிவு செய்தது. அதில், “ஊழல்களையும் உண்மை முகங்களையும் வெளிக்கொணர்ந்து பதிவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். விமர்சனத்தை முடக்குவதில் மட்டும்தான் இந்த அரசு proactive-ஆகச் செயல்படும் போல” என சாடினர். மேலும், போதைப்பொருள் பணத்தை வைத்து தான் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அமலாக்கத்துறை விளக்கம் என்ன?
இந்நிலையில் ஜான் பிரிட்டோ, தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினரோ அல்லது சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸின் சொந்தச் சகோதரரோ கிடையாது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலின்படி, "பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான ஜான் பிரிட்டோ என்பவரின் தந்தை பெயர் இருதயராஜ் (Irudayaraj) எனவும், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அந்த நபரின் வயது 40 என்றும் கூறப்படுகிறது. ஆனால், லீமா ரோஸின் சகோதரரின் பெயர் P.ஜான் பிரிட்டோ என்பது அவரது வயது 48 என்பதும், மற்ற வழக்குகளில் நீதிமன்றங்களில் அவர் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு, அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக தவறான தகவல்களை திமுக மற்றும் அதிமுகவினர் பரப்பி வருவதாக தவெகவினர் கடுமையாக பதிலடி தந்து வருகின்றனர்.
சட்டரீதியாக எதிர்கொள்ள தயார்..!
குற்றச்சாட்டுகள் தொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க வின் அரசியலே ஒட்டுமொத்தமாக பொய்யும், புரட்டையுமே தங்களது அரசியல் வழியாக காலந்தோறும் செய்துவருகிறது. அதன் நீட்சியை இப்போது தி.மு.கவின் ஐ.டி-விங்கும் துவக்கியுள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை, அவதூறு செய்திகளை தற்போது பரப்பி, தங்கள் அரசியல் நாகரீகம் அற்றவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்துவருகிறார்கள். தற்போது அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறிப்பிட்ட நபருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு துளி அளவும் தொடர்பு இல்லை. தைரியம் இருந்தால் அதை சட்டரீதியாக தி.மு.க ஐ.டி விங் இதை நிரூபிக்கட்டும். ஐந்து வருடங்களாக தி.மு.க ஆட்சியிலிருந்த போது போதை கலாச்சாரத்தை ஊக்குவித்து, தமிழகத்தை நாசகரம் செய்தததை மக்கள் மறக்கவில்லை. தி.மு.க வின் பொய்களுக்கும், வதந்திகளுக்கும் நாகரீகமற்ற குற்றசாட்டுகளுக்கும் விரைவில் சட்டரீதியாக நாங்கள் பதிலடி கொடுப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்























