மேலும் அறிய

DMK vs Congress : ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப துரோகம் புரிவதும் காங்கிரசுக்கு புதிதில்லை- சீறிய திமுக

இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர் என திமுக விமர்சித்துள்ளது.

தேர்தல் தோல்வி- திமுக இளைஞர் அணி ஆலோசனை

தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும், கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

திமுக தீர்மானங்கள்

 நடந்துமுடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மீதும், கழகத் தலைவர் அவர்கள் மீதும் நம்பிக்கை வைத்து தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கு இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

 கழகத் தலைவர் அவர்கள் கழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் அனைத்துவகை மறுசீரமைப்பிற்கும் கழக இளைஞர் அணி துணை நிற்பதோடு, வரும் காலங்களில் கழகத் தலைவர் அவர்கள் இடும் கட்டளைகளை - பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி, கழகப் பணியை மென்மேலும் வீரியத்துடன் மேற்கொள்ள உறுதியேற்கிறோம்.

முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சிக்குக் கண்டனம்!

கடந்த பல தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் கட்சியில் இருப்பவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணம் கழக உடன்பிறப்புகள்தான் என்பதை யாருமே மறுக்க முடியாது! மறைக்க முடியாது! நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க.வினரின் உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றனர். தேசிய கட்சியாக இருந்துகொண்டு தேர்தலுக்கு முன்பாகவே மாநிலக் கட்சியான தி.மு.க. உறுப்பினர்களின் வாக்குகளால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றனர்.

இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல் ஒரே இரவில் அணி மாறிச் சென்றிருக்கின்றனர்.  பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது. அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர்.

சொந்த உழைப்பில் வெற்றி பெற முடியாத காங்கிரஸ்

தி.மு.க. ஆட்சியமைக்க வேண்டும் என விரும்பிய மக்களின் வாக்குகளால்தான் இன்று அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்களே தவிர, இது அவர்கள் தங்கள் சொந்தச் செல்வாக்கினால் பெற்ற வெற்றியல்ல என்பதைக்கூட உணராமல், வரலாறு படைத்துவிட்டதாக உளறுகிறார்கள்.சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு இந்தக் கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Superstar Rajinikanth : ’ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்த தடை’ ஏன் இந்த அதிரடி..?
Superstar Rajinikanth : ’ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்த தடை’ ஏன் இந்த அதிரடி..?
Duraimurugan : ’அவமதிக்கப்பட்டாரா துரைமுருகன்’? மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு செல்லாமல் திரும்பினார்…!
’அவமதிக்கப்பட்டாரா துரைமுருகன்’? மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு செல்லாமல் திரும்பினார்…!
TVK ADMK : ”விஜய் அண்ணா சனிக்கிழமைன்னா வந்து ஆள் புடிச்சிட்டு போயிட்றாங்க” ஆர்.பி. உதயகுமார் வேதனை
”விஜய் அண்ணா சனிக்கிழமைன்னா வந்து ஆள் புடிச்சிட்டு போயிட்றாங்க” ஆர்.பி. உதயகுமார் வேதனை
Time to Lead : ’அதிமுகவை கைப்பற்றும் டிடிவி தினகரன்’ பொதுச்செயலாளர் ஆகிறாரா..?
’அதிமுகவை கைப்பற்றும் TTV தினகரன்’ பொதுச்செயலாளர் ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth: பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினிகாந்த் அறிக்கை; என்ன சொல்லி இருக்கார் தெரியுமா.?
பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினிகாந்த் அறிக்கை; என்ன சொல்லி இருக்கார் தெரியுமா.?
Time to Lead : ’அதிமுகவை கைப்பற்றும் டிடிவி தினகரன்’ பொதுச்செயலாளர் ஆகிறாரா..?
’அதிமுகவை கைப்பற்றும் TTV தினகரன்’ பொதுச்செயலாளர் ?
Duraimurugan : ’அவமதிக்கப்பட்டாரா துரைமுருகன்’? மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு செல்லாமல் திரும்பினார்…!
’அவமதிக்கப்பட்டாரா துரைமுருகன்’? மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு செல்லாமல் திரும்பினார்…!
Superstar Rajinikanth : ’ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்த தடை’ ஏன் இந்த அதிரடி..?
Superstar Rajinikanth : ’ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்த தடை’ ஏன் இந்த அதிரடி..?
DMK Alliance : ‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ கூட்டணியில் இருந்து வெளியேறும் வைகோ..?
‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ வெளியேறும் வைகோ..?
New Hyundai i20 Vs Old: சும்மா பேருக்கு மட்டும் புதுசு இல்ல, நிஜமான சம்பவம்.! ஹூண்டாய் ஐ20 புதுசு Vs பழசு; இவ்ளோ ஸ்பெஷலா.?
சும்மா பேருக்கு மட்டும் புதுசு இல்ல, நிஜமான சம்பவம்.! ஹூண்டாய் ஐ20 புதுசு Vs பழசு; இவ்ளோ ஸ்பெஷலா.?
IAF Plane Crash: அசாமில் அதிர்ச்சி.! விபத்துக்குள்ளான இந்தி விமானப்படை விமானம்; 5 வீரர்கள் பலியான சோகம்
அசாமில் அதிர்ச்சி.! விபத்துக்குள்ளான இந்தி விமானப்படை விமானம்; 5 வீரர்கள் பலியான சோகம்
TVK ADMK : ”விஜய் அண்ணா சனிக்கிழமைன்னா வந்து ஆள் புடிச்சிட்டு போயிட்றாங்க” ஆர்.பி. உதயகுமார் வேதனை
”விஜய் அண்ணா சனிக்கிழமைன்னா வந்து ஆள் புடிச்சிட்டு போயிட்றாங்க” ஆர்.பி. உதயகுமார் வேதனை
Embed widget