தொகுதி மறுவரையை தொடர்ந்து அடுத்ததாக ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டு வருவார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். 

Continues below advertisement

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி த லீடர் அமைப்பு தலைவர் அண்ணாமலை: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும் வேகமாக கொண்டுவரப்படும். தொகுதி மறுவரையறை நடக்கவேண்டும். இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் அது நல்லது. எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்று தெரியாமல் வலுவில்லாத எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எதிர்க்கட்சியாக அரசியல் செய்யாமல், பாஜகவிற்கு ஃபுல் டாஸ் பந்தை வீசிக்கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ். அது அமித்ஷா கையில் கிடைத்தால் அவர் சும்மா விடுவாரா? பாஜகவின் ஒரு நகர்வை கூட காங்கிரஸால் கணிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். 

அரசியல் களம் மாறிவிட்டது

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தந்துள்ளதால், தமிழக அரசியல் களம் மாறிவிட்டது. பாஜகவும் திமுகவும் கூட்டணி வைக்கத்தான் போகிறார்கள். பார்க்கத்தான் போகிறீர்கள். ஆனால் உடனடியாக திமுக பாஜக கூட்டணிக்கு செல்லாது. திமுகவின் 22 எம்.பி.க்களை சும்மா தாரை வார்க்க மாட்டார்கள். இனிமேல் திமுகவின் பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ வராது. ஏற்கனவே வழக்குகளில் இருப்பவர்கள் வெளியே வந்து காந்தியாக மாறிவிடுவார்கள். அடுத்த 6  மாதத்திற்குள் இது எல்லாம் நடக்கும். தமிழ்நாட்டிற்கு மக்களவை உறுப்பினர்கள் அதிகரிப்பது நல்லது தானே என்றார்.

Continues below advertisement

இதையும் படிங்க: MK Stalin: இது வாழ்வா? சாவா? போராட்டம்! மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை! மு.க.ஸ்டாலின்

அமைச்சரவையில் மாற்றம் வரும்

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இந்த மசோதா நிறைவேறிய பிறகு கண்டிப்பாக அமைச்சரவையில் மாற்றம் வரும். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஒருத்தர் அமைச்சராக வருவார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.