மேலும் அறிய

DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்

DMK: தோல்விகளை மனப்பூர்வமாக ஏற்று ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபடக்கூடிய கருணாநிதியிடம் இருந்து, திமுகவினர் எந்த பாடத்தையும் கற்கவில்லை போல என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

DMK: சட்டமன்ற தேர்தல் தோல்வியை ஏற்க முடியாமல் திமுகவினர் வாக்காளர்களையும், வெற்றி பெற்ற எதிர்தரப்பினடையும் தொடர்ந்து மரியாதைக்குறைவாகவும், அநாகரீகமாகவும் பேசிவருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கண்ட எதிர்பாராத தோல்வி:

10 ஆண்டுகள் கழித்து கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி அரியணையை பிடிக்க, ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். வலுவான எதிர்க்கட்சிகள் யாரும் இல்லை, பாஜக எதிர்ப்பு ஆகியவற்றால் 2026-லும் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என அறிவாலயம் தரப்பினர் நம்பகமாக இருந்தனர். ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியாக இருந்த திமுக மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களே எதிர்பாராத விதமாக அமைந்துவிட்டது. குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளர் ஆன ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தோல்வியுற்றதை உடன்பிறப்புகளால் இதுநாள் ஏற்கமுடியவில்லை. இதனால், தேர்தல் முடிவுகள் என்பது ஏமாற்றம் என்பதை தாண்டி, திமுகவினர் இடையே மக்கள் மீதான வெறுப்பாக மாறியுள்ளது.

மக்களுக்கு சாபம் விடும் திமுகவினர்..!

கடந்த 60 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுகவினருக்கு வாக்களித்த அதே மக்கள் தான், இன்று புதியதாக வந்துள்ள ஒரு கட்சிக்கு வாக்களித்து வாய்ப்பளித்துள்ளனர். ஆனால், அதனை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தான், திமுகவினர் இருக்கின்றனர் என்பதை ஸ்டாலின் தொடங்கி அந்த கட்சிக்கு பரப்புரை செய்யும் நடிகர் சத்யராஜ் வரையிலான பேச்சுகள் உணர்த்துகின்றன. 6 மாதங்களுக்கு பிறகு ஆட்சியை விமர்சிப்போம் என கூறிய ஸ்டாலின், 3 மாடங்களுக்கு கூட ஆட்சி நீடிக்காது என நிர்வாகிகளுக்கு ஆருடம் கூறுகிறார். அதன் தொடர்ச்சியாக மக்களை தற்குறிகள், முட்டாள்கள், கவர்ச்சிக்கு மயங்கி வாக்களித்தவர்கள், அரசியல்மயப்படுத்தப்படாதவர்கள், நன்றி கெட்டவர்கள் என மக்களை ஏக வசனத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி நிர்வாகி வரையிலான பலரும் சாடி வருகின்றனர். குற்றச்சம்பவங்கள் ஏதேனும் அரங்கேறினாலும், மின்வெட்டு போன்ற பிரச்னைகள் அரங்கேறும்போது கூட, மக்களுக்கு  உறுதுணையாக இல்லாமல் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை அல்லவா, அனுபவியுங்கள் என சாபம் விட்டுக்கொண்டு திரிகின்றனர்.

பொறாமையில் பொங்கும் திமுகவினர்..!

தேர்தலில் பெற்ற எதிர்பாராத தோல்விக்கான காரணங்களை கண்டறிய திமுக தலைமை ஒரு குழு அமைத்துள்ளது. அதன் மூலம் கட்சியில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என சூளுரைத்துள்ளது. ஆனால் திமுகவினரோ, ”இன்ஸ்டாகிராம் மூலம் மக்களை ஏமாற்றிவிட்டார்கள், முகம் தெரியாத நபர்களுக்கு எல்லாம் வாக்களித்துவிட்டார்கள், அந்த புதிய கட்சி எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளது, களத்தில் இறங்கி மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார்களா? ரூட் மாஃபியா செய்துவிட்டார்கள், செய்ய முடியாத வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி தெளித்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள், செயலற்ற முதலமைச்சர், பொம்மை முதலமைச்சர், ஆட்சி அதிகாரத்திற்கு தகுதியானவரே கிடையாது” என அடுக்கடுக்கான சம்மந்தமே இல்லாத பல விமர்சனங்களையும் பேசி வருகின்றனர். இதுபோக ஆ. ராசா, டி.கே.எஸ். இளங்கோவன். த.மோ. அன்பரசன் எனும் பல மூத்த நிர்வாகிகள் கூட, முதலமைச்சர் விஜயை ஒருமையில் பேசியும், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும் விமர்சித்து வருகின்றனர்.

கூட்டணி கட்சிகள் மீது அட்டாக்

இதுபோக, “எங்கள் தயவில் தான் ஆட்சி நடைபெறுகிறது, நாங்கள் தான் கூட்டணி  கட்சிகளை அனுப்பி வைத்தோம், எங்கள் தயவில் வென்றவர்கள் ஆட்சி அதிகாரத்திற்காக எதிர்தரப்பிற்கு தாவி விட்டனர்” என முன்னாள் கூட்டணி கட்சிகளையும் மிகவும் மோசமாக சாடி வருகின்றனர். அதாவது பண்ணையார் தனமும், மக்களை மதிக்காத செயல்பாடுகள் தான், திமுகவின் தோல்விக்கு காரணம் என்பதை உணராமல் இன்னும் அதையே தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளனர். திமுகவிற்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட சத்யராஜ் ஒரு படி மேலே சென்று, “திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்றால் பரவாயில்லை. அதிமுக, பாஜகவிற்கு வாக்களித்து இருக்கலாமே. அந்த புதிய கட்சிக்கு ஏன் வாக்களித்தீர்கள்” என்றெல்லாம் புலம்பியுள்ளார். அதாவது திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்றை ஆதரித்து இருக்கலாம், ஆனால் புதிய கட்சிக்கு எப்படி மக்கள் ஆதரவளிக்கலாம் என்பது போன்று திமுகவினர் பேசி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?

கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டங்க..! 

கருணாநிதி எதிர்கொள்ளாத தோல்விகளையா, ஸ்டாலின் பார்த்துவிட்டார்? என மூத்த உடன்பிறப்புகளே புலம்பும் அளவிற்கு திமுகவின் தற்போதைய செயல்பாடு உள்ளதாம். தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த விதமாக அமையாவிட்டால் மக்கள் தீர்ப்பை முழு மனதுடன் ஏற்பதாக கூறி, திமுக முன்னாள் தலைவர் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார். ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி தான் தனது அடுத்த அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார். ஒருபோதும் மக்களை குறைசொல்லியோ, வசைபாடியும் தன்னை தேற்றிக்கொண்டதில்லை என மூத்த உடன்பிறப்புகள் பெருமை பேசுகின்றனர். ஆனால், தற்போதைய திமுகவினர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், பொருமி வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அதிலும் வாக்காளர்களை குறைசொல்வதும், சாபம் விடுவது எல்லாம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளது. கருணாநிதி இப்படி செயல்பட்டு இருந்தால், திமுகவை மிகப்பெரிய கட்சியாக வளர்த்து இருக்கவே முடியாது. ஆனால், அதையெல்லாம் சற்றும் உணராமலும், அவரிடமிருந்து எந்தவொரு படிப்பினையையும் பெறாதவர்களாகவே தற்போது திமுகவினர் செயல்படுவதாக கழகத்தின் மூத்த உறுப்பினர்களும், உண்மையான விசுவாசிகளும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
"உங்க கட்சியினரை ஒழுங்கா வச்சுகிட்டா ஏன் வர்றாங்க?" - புதுச்சேரி மேடையில் அதிமுக-வை வாரிச் சுருட்டிய அமைச்சர் ஆனந்த்!
ரத்தக் களறியான அதிமுக கூட்டம்: சி.வி.சண்முகம் - இபிஎஸ் ஆதரவாளர்கள் நடுரோட்டில் பயங்கர மோதல்!
ரத்தக் களறியான அதிமுக கூட்டம்: சி.வி.சண்முகம் - இபிஎஸ் ஆதரவாளர்கள் நடுரோட்டில் பயங்கர மோதல்!
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget