பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை கூறி அதனை நினைவூட்டும் வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திமுக பொதுக்கூட்ட நிகழ்வில் பொதுமக்களுக்கு வடைகள் வழங்கிய திமுகவினர்.


 




கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்ட பள்ளப்பட்டி நகராட்சி, புகலூர் நகராட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ தலைமைக் கழக பேச்சாளர் கவிதை பித்தன் மற்றும் திமுக நிர்வாகிகள் என ஏராளமான பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாயிலே வடை சுடுவதாகவும் மோடி அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை எனக் கூறியும் மோடி புகைப்படம் கூடிய முகமூடி அணிந்து  மோடி சுட்ட வடைகள் என சில திட்டங்களை நோட்டீஸில் பட்டியலிட்டு அதில் வடையை வைத்து திமுகவினர் பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். 


 




 


பின்னர்  பேசிய கவிதை பித்தன்: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்தியாவே வியந்து பார்க்கக் கூடிய அளவிற்கு குடும்பத் தலைவிகளுக்கு, கல்லூரி மாணவிகளுக்கு, 1000 ரூபாய் ரொக்கம். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திராவிட மாடல் குறித்து பொன்மொழிகளால் கூறினார். தாழ்த்தப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நீதி அரசர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல துறைகளில் உயர்ந்த நிலைகளுக்கு திராவிட மாடல்தான் காரணம். அதனை தாங்கிக் கொள்ள முடியாத சிலர் ஆரியம், பாசிசம், இருக்கிறது. கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் சென்று வருகிறது.


 




 


புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை, ஒரே நாடு ஒரே சட்டம், இந்திய குடியுரிமை சட்டம், வேளாண்மை மசோதாக்கள் என்று கொண்டு வந்து எதுவும் கிடைக்காமல் 3000 ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு செல்ல ஒன்றிய அரசு துடிக்கிறது. மீண்டும் டெல்லியில் பாஜக  ஆட்சிக்கு வந்தால் கடைசியாக சந்திக்கக் கூடியது இந்த தேர்தலாக தான் இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி வர்ணாசிரமம், மனுதர்மத்தை அரசியலமைப்பு சட்டமாக மாற்றி விடுவார்கள். தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் ஒன்றிய அரசு  நிறுத்தி விடும். இந்த நாடு மனித நேயத்திற்கு மாறாக சென்று விடும் கிராமத்திற்குள் ராணுவம் புகுந்து தமிழ் சகோதர சகோதரிகளே  சூறையாடும் நிகழ்வு கூட நடைபெறும் என்று கூறினார்.