கறிக்கடைகளில் கூட இவ்வளவு வெட்ட மாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் தினசரி வெட்டு குத்து நடந்து கொண்டிருக்கிறது என்று உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசி வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:
’’தமிழகத்தில் தினமும் செய்தித்தாள்களில் பார்த்தால் ஏராளமான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கறிக்கடைகளில் கூட இவ்வளவு வெட்ட மாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் தினசரி வெட்டு குத்து நடந்து கொண்டிருக்கிறது.
நகைக்காக கொலை, போதைப்பொருள் விற்பனையை அம்பலப்படுத்தினால் கொலை, மதுபோதையில் கொலை என கொலை நடக்காத நாளே தமிழ்நாட்டில் இல்லை.
116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆட்சி அமைந்த 116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. ஆனால் முதல்வர் ஒரு கொலை பற்றிக் கூட வாயே திறக்கவில்லை.
திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை என்று கூறிய தவெகவினர், இப்போது தனிநபர் ஒழுக்கம் என்று பாடம் எடுக்கின்றனர்’’.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
