மேலும் அறிய

MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்

போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

செவிலியர்கள் போராட்டம்- வலுக்கட்டாயமாக கைது

பணி நிரந்திரம், சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா? பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முரண்பாட்டு மூட்டையாக முதலமைச்சர் விஜய்

போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ? போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு; தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி; ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை! முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

செவிலியர்கள் கைது- “சிங்கப்பெண் in action” 

போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா? போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reels செய்து தனது virtual abuser-கள் மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா? என ஸ்டாலின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
புல்லட்டில் சென்று மக்கள் குறைகளைக் கேட்டவர்! இனி அந்த அன்பு முகத்தை காண முடியாதே! கலங்கிய மு.க.ஸ்டாலின்!
புல்லட்டில் சென்று மக்கள் குறைகளைக் கேட்டவர்! இனி அந்த அன்பு முகத்தை காண முடியாதே! கலங்கிய மு.க.ஸ்டாலின்!
புதுக்கோட்டையில் பரபரப்பு... திமுகவினர் லட்டு கொடுக்க முயன்றதை தடுத்த போலீசார்: இன்றும் கொடுப்போம் என சூளுரை
புதுக்கோட்டையில் பரபரப்பு... திமுகவினர் லட்டு கொடுக்க முயன்றதை தடுத்த போலீசார்: இன்றும் கொடுப்போம் என சூளுரை
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிமுகவில்.. யார் இந்த வெள்ளைதுரை? இடைத்தேர்தலில் களமிறக்க இபிஎஸ் திட்டம்?
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிமுகவில்.. யார் இந்த வெள்ளைதுரை? இடைத்தேர்தலில் களமிறக்க இபிஎஸ் திட்டம்?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
TASMAC: குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்...100 மீட்டருக்குள் பார்.. தமிழக அரசின் புது ரூல்ஸ்! முழு விவரம் இதோ!
TASMAC: குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்...100 மீட்டருக்குள் பார்.. தமிழக அரசின் புது ரூல்ஸ்! முழு விவரம் இதோ!
TN Luxury Cars: டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
ஹோட்டலில் தோசை சுட்டு ஓட்டுக்கேட்ட அமெரிக்க வேட்பாளர்! அங்க வரை பரப்பிட்டீங்களா?
ஹோட்டலில் தோசை சுட்டு ஓட்டுக்கேட்ட அமெரிக்க வேட்பாளர்! அங்க வரை பரப்பிட்டீங்களா?
Gold Rate Today: வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம்.. கவலையில் நகைப்பிரியர்கள்!
Gold Rate Today: வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம்.. கவலையில் நகைப்பிரியர்கள்!
TN Weather News: தீவிர புயலாக உருவெடுத்த முரசு..! இன்று மிக கனமழை எச்சரிக்கை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
தீவிர புயலாக உருவெடுத்த முரசு..! இன்று மிக கனமழை எச்சரிக்கை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று
தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று
Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!
Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!
Embed widget