மேலும் அறிய

குறட்டை குமார், மங்குனி, மரமண்டை, இரக்கமற்ற ஜந்து.! தவெக அரசை போட்டு பொளந்த திமுக

DMK IT WING : சோஷியல் மீடியாக்களில் "இவர் தான் மாற்றம்" என மக்களே மூலைச் சலவை செய்து, இந்த மங்குனியை அரியணையில் அமர்த்த பணிபுரிந்த Paid Influencers கூட்டமே, இப்பொழுது எங்கே போய் ஒழிந்து கொண்டீர்கள்? என திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.

கும்மிடிப்பூண்டி 3 வயது குழந்தை கொலை

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது. 
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், இன்னும் எவ்வளவு காலம் தான் தூங்குவது போல் நடிப்பீர்கள் 'குறட்டை குமார் முதல்வரே'! தமிழ்நாடு இதுவரை கண்டிராத மிகக் கேவலமான சட்டம்-ஒழுங்கு சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது!

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முட்புதரில் வீசப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது. அதே நாளில், பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்யப்பட்டுள்ளது.

பெத்தவங்களோட குமுறலும், நெஞ்சகப் பதற்றமும்

உங்களுக்கென்று ஒரு குடும்பம் இல்லாத காரணத்தால் தான், பாதிக்கப்பட்ட இந்த ஏழைப் பெற்றோர்களின் வலியும், பச்சிளம் குழந்தைகளின் வேதனையும் உமது மரமண்டைக்கு உறைக்கவில்லையா? பெத்தவங்களோட குமுறலும், நெஞ்சகப் பதற்றமும் புரியாத ஒரு இரக்கமற்ற ஜந்துவாக இந்த மாநிலத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு!

ஸ்ரீவைகுண்டத்திலும், சேலத்திலும் உங்கள் சொந்தத் தவெக கட்சிப் பொறுக்கிகள் பாலியல் அசிங்கங்களை அரங்கேற்றியபோது, அவர்களைக் கட்சியை விட்டு நீங்காமல், காப்பாற்ற முற்படுகிறீர்களே, அதன் விளைவு தான் இன்று கும்மிடிப்பூண்டியிலும், பூந்தமல்லியிலும் பச்சிளம் குழந்தைகள் சீரழிக்கப்படும் இந்த உச்சக்கட்ட அவலம்!

தூங்குவது போல் நடிப்பதை நிறுத்துங்கள்

நீங்கள் உண்மையான முதல்வரும் இல்லை, உங்களை ஆட்டுவிக்கும் நிழல் முதல்வர்களுக்கு இந்த குற்றங்கள் பற்றிய கவலை இல்லை என்பதால் தான், இன்று தமிழ்நாட்டில் காமக்கொடூரர்கள் பயமின்றித் திரிகிறார்கள். அடுத்து, சோஷியல் மீடியாக்களில் "இவர் தான் மாற்றம்" என மக்களே மூலைச் சலவை செய்து, இந்த மங்குனியை அரியணையில் அமர்த்த பணிபுரிந்த Paid Influencers கூட்டமே, இப்பொழுது எங்கே போய் ஒழிந்து கொண்டீர்கள்?

3 வயதுக் குழந்தையின் மரணத்திற்கு உங்களின் அந்தப் போலி விளம்பரங்களும் ஒரு மிக முக்கியக் காரணம் என்பதை ஒப்புக்கொள்வீர்களா? உங்களின் 'மாற்றத்தின்' லட்சணம் இதுதானா? இனியாவது தூங்குவது போல் நடிப்பதை நிறுத்திவிட்டு குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள் என திமுக ஐடி விங் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget