மயிலாடுதுறையில் சிராஜூல் தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா தமிழ் இலக்கியப் பேரவையின் மாநில தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடைபெற்றது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபுபக்கர், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிப் பேசினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபுபக்கர் கூறியதாவது:




இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 25 -ஆம் ஆண்டு விழாவையொட்டி அடுத்த ஆண்டு மார்ச் 10 -ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் தமிழக முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார். இம்மாநாட்டில் சமய நல்லிணக்கம், நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட 25 தியாகிகளை கௌரவிக்க உள்ளோம். பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு சட்டங்களைக் கொண்டுவந்து மக்களை பிரிக்கும் சூட்சுமங்களை செய்து வருகின்றனர். அதன்தொடர்ச்சியாக பொது சிவில் சட்டம் கொண்டுவருவதாக அறிவித்துள்ளனர். 




4500க்கும் மேற்பட்ட மொழிகளை பேசக்கூடிய பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வருவது பொருந்தாது. ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது பிரச்னையை சொல்லி ஆட்சிக்கு வர பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது. பொது சிவில் சட்டம் இந்திய நாட்டுக்கு பொருந்தாத சட்டம் ஆகும். தமிழக அரசின்மீது வீண் பழியை சுமத்தி குழப்பதைதை ஏற்படுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நினைக்கிறார். குறிப்பாக, கோயமுத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிடுகிறார். எங்களைப் பொறுத்தவரை திமுக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என்றார்.




அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறையில் முதன்மை கல்வி அலுவலகம் வளாகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கபிலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். சிபிஎஸ் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதி திட்டத்தினை கொண்டு வர வேண்டும். 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு பதிலாக பதிலி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின் கட்டணத்தில் அரசு செலுத்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


Kanchipuram Lakes : ஒரே இரவில் இத்தனை ஏரிகள் நிரம்பிடுச்சா? காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ