மேலும் அறிய

CM Vijay Trisha: சிஎம் விஜயுடன் த்ரிஷா..! துக்க வீட்டிலும் அரசியலா? இணையத்தில் மல்லுக்கட்டும் திமுக - தவெக

CM Vijay Trisha: முதலமைச்சர் விஜய் உடன் சேர்ந்து நடிகை த்ரிஷாவும் சென்று, அஜித்குமாரின் தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது பேசுபொருளாக மாறியுள்ளது.

CM Vijay Trisha: முதலமைச்சர் விஜய் உடன் சேர்ந்து நடிகை த்ரிஷா துக்க வீட்டிற்கு சென்றது குறித்து, திமுக மற்றும் தவெகவினர் இடையே இணையத்தில் வார்த்தை மோதலை உருவாக்கியுள்ளது.

துக்க வீட்டில் முதலமைச்சர் விஜய் - த்ரிஷா

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகிணி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதையடுத்து சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பலரும் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அஜித்குமாரின் நெருங்கிய நண்பரும், முதலமைச்சருமான விஜயும் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மோகினியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், அஜித்தை கட்டியணைத்தும் ஆறுதல் கூறினார். அப்போது அவர் பயணித்த வாகனத்திலேயே நடிகை த்ரிஷாவும் சென்று இருந்தார். இறுதியாக அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் வாசல் வரை வந்து, முதலமைச்சர் விஜயை வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில் துக்க வீட்டிற்கு விஜய் த்ரிஷாவுடன் சென்ற விவகாரம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

விமர்சிக்கும் நெட்டிசன்ஸ், திமுகவினர்..

மனைவி சங்கீதா உடனான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், த்ரிஷாவை விஜய் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம்செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.  இப்படிப்பட்ட சூழலில் விவாகரத்து கூட பெறாத நிலையில், நடிகையை எல்லா இடத்திற்கும் குறிப்பாக துக்க வீட்டிற்கு கூட அழைத்துச் செல்வது நியாயமா? அரசு செலவில் முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக தான் கான்வாய் வசதி வழங்கப்படுகிறது. அதில் தனிநபர்களை எப்படி விஜய் அழைத்துச் செல்லலாம்? இந்த நிகழ்வை எல்லாம் பார்க்கும்போது சங்கீதாவின் மனம் புண்படாதா? என சரமாரியாக கேள்விகளை திமுக தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர். அதேநேரம், உங்களது தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும், விவாகரத்து பெறும் வரையிலாவது த்ரிஷாவுடன் சிறிது இடைவெளியை பின்பற்றலாமே என பொதுவான நெட்டிசன்களும் விஜய்க்கு அறிவுறுத்தி வருகின்றனர். உங்களது செயல் தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் எனவும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

துக்க வீட்டில் கூடவா அரசியல்?

இணையத்தில் முன்வைக்கப்படும் சில மோசமான, அநாகரீகமான மற்றும் தரம் குறைந்த சில பதிவுகளை மட்டும் குறிப்பிட்டு, துக்க வீட்டிலுமா அரசியல் செய்வீர்கள்? என தவெகவினர் பதிலளித்து வருகின்றனர். ஆக்கப்பூர்வமாகவோ அல்லது விஜயின் அரசியல் மறும் நிர்வாக செயல்பாடுகள் காரணமாகவோ அவரை தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து ஏன் அரசியல் செய்ய வேண்டும்? குறிப்பாக, முதலமைச்சர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அமைச்சர் ரமேஷ் போன்றோரை சாதியை வைத்து சாடுவது போன்ற மிகவும் மலிவான அரசியலில் திமுகவின் ஈடுபட்டு வருவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: TN Weather Update: பலத்த காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை

அதேநேரம், அரசு பணத்தை விஜய் வீண் செலவு செய்வதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், அரசு மற்றும் தனிப்பட்ட பயணம் என எதுவானாலும் முதலமைச்சர் விஜய் எங்கு சென்றாலு, அவரது பாதுகாப்பிற்கான கான்வாய் அவருடன் செல்வதை தவிர்க்க முடியாது. அதோடு, இந்த பயணத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க வேண்டும் என்றெல்லாம் விஜய் முற்படவில்லையே, அப்படி இருக்கையில் எதற்காக இப்படி மிகவும் தரக்குறைவான செயல்களில் எதிர்தரப்பில் ஈடுபட வேண்டும் எனவும் தவெகவினர் பதிலடி தந்து வருகின்றனர். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundaram: திருப்பரங்குன்றம் விவகாரம்; நிர்மல்குமாரின் பேட்டி மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது - தமிழிசை விமர்சனம்
Thiruparankundaram: திருப்பரங்குன்றம் விவகாரம்; நிர்மல்குமாரின் பேட்டி மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது - தமிழிசை விமர்சனம்
திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Embed widget