MK Stalin: ”நாங்க தான் மெஜாரிட்டி” கூடுதல் நேரம் ஒதுக்கனும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
MK Stalin: சட்டபேரவையில் எதிர்க்கட்சியினர் தான் பெரும்பான்மையாக உள்ளதாக, முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin: புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவருக்கு, முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாங்க தான் மெஜாரிட்டி - ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும். ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு! அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எழுந்த கோரிக்கை:
சட்டப்பேரவையில் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் மற்றும் துணை சபநாயகராக ரவிகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய பல்வேறு சட்டமன்ற குழு தலைவர்களும், பேரவை விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், “தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்களுக்கு இணையாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கும் மதிப்பளிக்கப்படும்” என உறுதியளித்தார். அதே கோரிக்கையை தான் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 12, 2026
மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில்…
ஸ்டாலின் இல்லாத சட்டப்பேரவை
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடந்த 35 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் பங்கேற்காதது இதுவே முதல்முறையாகும். கொளத்தூரில் தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியிட்ட ஸ்டாலினை, தவெக சார்பில் களமிறங்கிய முன்னாள் திமுக நிர்வாகியான வி.எஸ். பாபு சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன் மூலம் சட்டப்பேரவைக்கு செல்லும் வாய்ப்பை ஸ்டாலின் இழந்தார். இந்நிலையில் தான் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான நேரத்தை முறையாக ஒதுக்க வேண்டும் என தனது ட்விட்டர் பதிவின் மூலம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆளுங்கட்சியான தவெகவில் 107 உறுப்பினர்கள் உள்ள நிலையில், வெளியில் இருந்து ஆதரவளிக்கும் கட்சிகள் உட்பட எதிர்க்கட்சி இருக்கையில் 126 உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















