தேமுதிக நிலைப்பாடு:
விஜய்யுடன் கூட்டணி குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, தேமுதிக வின் நிலைப்பாடு என்னவென்றால், இன்றைய அரசியல் களத்திற்கு வருபவர்கள், தங்கள் எதிரி யார் என்று முடிவு செய்து விட்டுத்தான் வருகிறார்கள். அந்த வகையில், விஜய் தனது கருத்தை கூறியிருக்கிறார்,பொறுத்திருந்து பார்ப்போம். இப்பொழுதுதான் மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறார். அவர், இன்னும் கடந்து வரக்கூடிய பாதைகள் நிறைய உள்ளன. ஆகையால், வரும் காலத்தில் அவருடைய செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சீமான் மீது விமர்சனம்:
அவரிடம் , திராவிடமும் தமிழ் தேசியமும் என்ற தவெக கொள்கையை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கடுமையாக எதிர்ப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது, தேசியத்தில்தான் திராவிடம் இருக்கிறது; திராவிடத்தில் தமிழகம் இருக்கிறது என்பது எனது கருத்து சீமான் திடீர்னு அம்பியாக மாறுவார்; திடீர்னு அம்பியாக மாறுவார். விஜய்யை ஏன் தம்பினு கூறினார். இப்போ ஏன் வண்டியில் அடிபட்டு சாவீர் என கூறினார்,எல்லாருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்திருக்கிறார். அதற்காக வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
விஜய் - சீமான்:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடானது, அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. விக்கிரவாண்டியில் நடைபெற்ற இந்த முதல் மாநாட்டில் த.வெ.க.வின் அரசியல் கொள்கைகள், நிலைப்பாடு ஆகியவற்றை விஜய் அறிவித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்திட்டங்கள் குறித்தும் அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தவெக-வின் கொள்கைகள், விஜய்யின் திட்டங்கள் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து பேசியதாவது, “ விஜய்யின் கொள்கை கோட்பாடும், எங்களது கொள்கை கோட்பாடும் ஒத்துப்போகவில்லை. நான் சொன்னது நீண்டகால இன வரலாறு, இனப்பிரச்சினை, இங்க இருக்கது பிரச்சினைக்கு தீர்வாக இந்திய தேசிய, இந்திய திராவிட அரசியலுக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள்.
தவெகவின் திராவிடமும் தேசியமும் ஆகிய இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் கண் என்கிறார். அதெப்படி இரண்டும் சமம் என்று சொல்ல முடியும். மொழியில் இரு மொழிக் கொள்கை. அடுத்தவன் மொழி எப்படி எனக்கு மொழிக் கொள்கையாக இருக்க முடியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தொடக்கத்தில் இருந்தே பெரிதும் வரவேற்று வந்தவர் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் தமிழ் தேசியத்தை முன்னெடுத்து திராவிட சித்தாந்தத்தை எதிர்த்து அரசியல் கட்சியை நடத்தி வரும் சூழலில், விஜய் தமிழ் தேசியமும், திராவிடமும் தனது இரு கண்கள் என்று கூறியுள்ள நிலையில் சீமான் மற்றும் மட்டுமன்று அவரது கட்சியினரும் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.