சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டம் ;  

Continues below advertisement

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையிலும், காங்கிரஸ் கட்சியில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட தலைவர்களை நியமிக்கவும் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டம் துவக்கப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டத்திற்கான சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்ட ஆலோசனை கூட்டம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் சென்னை வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட மேற்பார்வையாளர் ராமச்சந்திர குன்ஷியா இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Continues below advertisement

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முருகன் , மாநில செயலாளர்கள்  பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் , சர்க்கிள் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான நடந்து கொண்டனர். புதிதாக வடசென்னை மேற்கு மாவட்டத்திற்கு போட்டியிடும் நபர்கள் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து மேலிட பொறுப்பாளரிடம் தனித் தனியாக ஒப்படைத்தனர். அவர்களிடம் தற்போதைய வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரின் செயல்பாடுகள் மற்றும் மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து மேலிட பொறுப்பாளர்கள் கேட்டறிந்தனர்.

நிகழ்ச்சியில் மேலிட பொறுப்பாளர் ராமச்சந்திரா குன்ஷியா பேசியதாவது ;

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். தற்போது இங்கு பார்வையாளராக வருவதற்கு முன்பாக 4 மாநிலத்தில் இந்த பணியை முடித்து விட்டு தற்போது தமிழகத்தில் வடசென்னை பகுதியில் இந்த பணியை துவக்கியுள்ளோம்.

மேலும் தற்போது இருக்கும் மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் மற்றும் புதியதாக யாரேனும் மாவட்ட தலைவராக விரும்புகிறீர்களா அவர்கள் வெளிப்படையாக தங்களது கருத்துக்களை தெரிவியுங்கள். இதற்கான பிரத்யேக படிவம் இங்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படிவத்தை தேவையான ஆவணங்களுடன் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பீகார் தேர்தலின் போது நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் மூலம் நடைபெற்ற மோசடி குறித்து எங்கள் தலைவர் ஏற்கனவே எடுத்துரைத்து விட்டார். அவருடைய வழியில் நாங்கள் எஸ்.ஐ.ஆரை முழுமையாக எதிர்க்கிறோம் என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முருகன் மாநில செயலாளர்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் சர்க்கிள் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான நடந்து கொண்டனர்.