அம்பேத்கர்-பகத்சிங் படங்களை பாஜக அகற்றியுள்ளது: சட்டசபையை முடக்கிய ஆம் ஆத்மி..பாஜக சொன்னது என்ன?
Delhi AAP-BJP: அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்களை, பாஜக அகற்றியதாக கூறி ஆம் ஆத்மியினரின் அமளியால், சட்டப்பேரவையின் முதல்நாளே முடங்கியது.

டெல்லி ஒன்றிய பிரேதசத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசானது, ஆட்சியமைத்துள்ள நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டமானது தொடங்கியது. ஆனால் முதல் நாளே, பாஜகவினருக்கும் , எதிர்க்கட்சியான ஆம் ஆத்மிக்கு இடையே வாக்குவாதத்தால், முதல்நாளே சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படும் நிலைக்குச் சென்றுவிட்டது.
டெல்லி சட்டப்பேரவை முடக்கம்:
டெல்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின்போது, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் படங்கள் அகற்றப்பட்டதாக, ஆம் ஆத்மி கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
Just In




அப்போது சபாநாயகர் விஜேந்தர் குப்தா குறுக்கிட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்து அவையை செயல்பட அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் சபைக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்துடன் வந்துள்ளனர். நீங்கள் இதை அரசியல் மேடையாக்க கூடாது. உங்களது நடவடிக்கையானது, சபை சுமூகமாக நடைபெறுவதை, எதிர்க்கட்சி விரும்பவில்லை என்பதை காட்டுகிறது என தெரிவித்து, சட்டப்பேரவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு:
இதையடுத்து சட்டசபைக்கு வெளியே வந்த அதிஷி, “ பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைக்கத் தொடங்கினார். " பாஜக தலித் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான கட்சி" என்று குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா கட்சியின் தலித் எதிர்ப்பு மனப்பான்மை அனைவரும் அறிந்ததே. இன்று தலித் விரோத மனநிலைக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. டெல்லி அரசின் ஒவ்வொரு அலுவலகத்திலும் அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்களை அரவிந்த் கெஜ்ரிவால் வைத்திருந்தார். அதை, பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்த இரண்டு தலைவர்களின் புகைப்படங்களையும் பாஜக நீக்கியுள்ளது, என அதிஷி குற்றம் சாட்டினார்.
டெல்லி முதலமைச்சர் விளக்கம்
ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு குறித்து பேசிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, " அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோருக்கு பின்னால் அவர்களின் ஊழல் மற்றும் தவறான செயல்களை மறைப்பதற்கான தந்திரம் இது.இந்த அறை டில்லி முதல்வருடையது, அவர்களுக்கு பதில் அளிப்பது என் வேலையல்ல, மக்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு, அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் உருவப்படங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிஷி கூறியது பொய் என்றும், டெல்லி முதல்வர், அலுவலகத்தில் அம்பேத்கர் மற்றும் பகத்சிங் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கிறது, புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்
மேலும், பாஜக எம்எல்ஏ தர்விந்தர் சிங் மர்வா கூறுகையில், ” ஆம் ஆத்மி கூற்றுகள் ஆதாரமற்றது. எந்தப் புகைப்படமும் அகற்றப்படவில்லை.அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே பொய் சொன்னார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் அதிஷி அவரை விட இருக்கிறார் என்று ஆம் ஆத்மி மீது குற்றசாட்டு வைத்தார்.