”வாக்குறுதி கொடுத்தது திமுக தான்! அங்கு போங்க” – அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கையை புறக்கணித்த நயினார்...
மத்திய , மாநில அரசுகளை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம். நயினாரிடம் சொல்ல வந்த குறைகளை கண்டுகொள்ளாமல் புறப்பட்டதால் அதிர்ச்சி

மத்திய, மாநில அரசுகள் மாறி மாறி அலைகழித்தால் என்ன செய்வது என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அங்கன் வாடி ஊழியர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், வாக்குறுதி அளித்ததது திமுக தான் என்றும் அங்கு சென்று முறையிடுங்கள் என கூறி புறப்பட்டு சென்றது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய–மாநில அரசுகள் அலட்சியம்
காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் வழங்க வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் பத்தாவது நாளாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே அங்கேயே படுத்து உறங்கி சமையல் செய்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பத்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அப்போது அவர்கள் நயினார் நாகேந்திரனிடம் தங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் சேர்ந்துதான் நிதி ஒதுக்குவதாகவும் அப்படி இருக்கும் பொழுது மாநில அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் மத்திய அரசாவது எங்களது கோரிக்கைகளை ஏற்று நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அப்போது, தேர்தல் வாக்குறுதி அளித்தது விளம்பர திமுக அரசு தான் என்றம் அங்கு சென்று முறையிடுங்கள் என அங்கிருந்து சென்றார் இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.























