2021 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


உலக அளவில் ஊடகத்துறையில் சாதனை புரியும் பத்திரிக்கையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலை கழகம் புலிட்சர் விருதை வழங்கி வருகிறது. இந்த விருதுகளை 1917-ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட  21 பிரிவுகளில் வருடந்தோறும் வழங்கப்படும் இந்த 'புலிட்சர் விருது' ஊடகத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் தற்போது 2021 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.






இந்தியர்கள் 4 பேருக்கு விருது 


இந்தப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ், ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக்கி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மறைந்த டேனிஷ் சித்திக்கிற்கு ஆப்கானிஸ்தான் போரை படம் பிடித்ததற்காகவும், இன்ன பிறருக்கு கொரோனா காலத்தின் கோர முகங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 


விருது விவரங்கள் 


பொதுசேவை 


வாஷிங்டன் போஸ்ட் 


பிரேக்கிங் நியூஸ் ரிப்போர்ட்டிங் 


மியாமி ஹெரால்டு பத்திரிக்கையாளருக்கு, மியாமி கடற்கரை அருகே கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தை பதிவு செய்தமைக்காக வழங்கப்பட உள்ளது.


இன்வெஸ்டிகேட் ரிப்போர்ட்டிங் 


தம்பா பே டைம்ஸ் பத்திரிக்கையின் கோரி ஜி. ஜான்சன், ரெபேக்கா வூலிங்டன் இலி முர்ரே ஆகியோருக்கு இந்தப் பிரிவில் விருதுகள் கிடைத்துள்ளது. 


விரிவாக செய்திகளை வழங்குதல் 


குவாண்டா மேகஸினின் நடாலி வால்கோவருக்கு வெப் ஸ்பேஸ் டெலிஸ்கோப் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தான செய்திக்கு வழங்கப்பட்டுள்ளது. 


உள்ளூர் செய்திகளை வழங்குதல் 


பெட்டர் கவர்மெண்ட் அசோசியனை சேர்ந்த மேடிசன் ஹாப்கின்ஸ், சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிக்கையை சேர்ந்த சிசிலியா ரெய்ஸ் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. 


தேசிய அளவிலான செய்திகள்


நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் 


உலக அளவிலான செய்திகளை வழங்குதல் 


நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் 


விமர்சனம் 


சமூக ஆர்வலர் சலாமிஷா டில்லெட்


இன்னும் பலருக்கு வெவ்வேறு பிரிவுகளில் கீழ் புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.