Ponmudi vs Lakshmanan : CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் திமுக, அதிமுகவை சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் விழுப்புரம் தொகுதி திமுக MLA லட்சுமணனுக்கு எதிராக ஒருவரை ஒருவரை புகழ்ந்துள்ள சம்பவம் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது

விழுப்புரத்தில் திமுகனா பொன்முடி அதிமுகனா சிவி சண்முகம் என்ற நிலை இருந்து வரும் நிலையில் தற்போது லட்சுமணனின் கை விழுப்புரத்தில் ஓங்க துவங்கியுள்ளது முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கும் வயிற்றில் புலியை கரைக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் தங்களை தாண்டி வேறு யாரும் தலை தூக்க கூடாது என்ற நோக்கத்தில் எதிரெதிர் கட்சியை சேர்ந்த இருவரும் டீல் பேசி, லட்சுமணனுக்கு எதிராக காய்களை நகர்த்தி வருவதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதனையடுத்து தற்போது இருவரும் ஒருவரை ஒருவர் வெளிப்படையாகவே புகழ்ந்து பேசியும் லட்சுமணனுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருவது இந்த சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்துள்ளது.
லட்சுமணன் vs சி.வி.சண்முகம்
ஜெயலலிதா காலம் வரை அதிமுகவில் இருந்த லட்சுமணன் அவரது மறைவுக்கு பின் எடப்பாடி தலைமைக்கு கீழ் செல்ல விரும்பாமல் திமுகவிற்கு தாவினார். அதிமுகவில் இருந்த போதே சிவி சண்முகத்துடன் லட்சுமணனுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரத்தில் சிவி சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி காண்பேன் என்று உறுதி அளித்து அவர் கூறியது போன்றே விழுப்புரம் தொகுதியில் சிவி சண்முகத்தை தோற்கடித்தார்.
விழுப்புரத்தின் அதிமுகவின் முகமாக இருந்து வந்த சிவி சண்முகத்தை பொன்முடியை தாண்டி புதிதாக வந்த லட்சுமணன் வீழ்த்தியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் லட்சுமணனை நேரம் பார்த்து காலி செய்ய வேண்டும் என சிவி சண்முகம் நீண்ட நாட்களாகவே ஸ்கெட்ச் போட்டுவருவதாக கூறப்படுகிறது.
பொன்முடி vs லட்சுமணன் நேருக்கு நேர்!
மற்றொரு புறம் விழுப்புரத்தின் திமுக முகமான பொன்முடியோ தன்னை தாண்டி கட்சியில் இன்னொருவர் வளர்வதை விரும்பாமல் லட்சுமணனுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வந்தார். பொன்முடியை பகைத்து அரசியல் செய்ய முடியாமல் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பதவியை போராடி பெற்றார் லட்சுமணன். இருப்பினும் பொன்முடிக்கு லட்சுமணன் தன்னை மீறி வளர்ந்து விட கூடாதென்பதற்காக பல நிகழ்ச்சிகளில் லட்சுமணனை ஓரம் கட்டி முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து வருகிறார். திமுகவில் லட்சுமணனும் பொன்முடி இருவரும் இருந்தாலும் இருவருக்குள் இடைவெளியும் வெளியில் தெரியாத மோதல் போக்கு இருந்து வருகிறது. பொன்முடியின் மகன் கெளதமசிகாமனிக்கு விக்கிரவாண்டி திருக்கோவிலூர் இரு தொகுதிகளுக்கான தெற்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டபோது பொன்முடி நேரடியாகவே லட்சுமணனிடம் விழுப்புரம் தொகுதியை விட்டு கொடுத்து விக்கிரவாண்டி எடுத்துகொண்டு மாவட்ட செயலாளராக செயல்பட கேட்டுக்கொண்டார்.
ஆனால் லட்சுமணன் கட்சியின் தலைவர் ஸ்டாலின் போட்ட பதவியை நான் கொடுக்க மாட்டேன் மாற்றம் செய்ய மாட்டேன் என நேருக்கு நேராக பொன்முடியிடம் தெரிவித்தார். இப்படிப்பட்ட சூழலில் லட்சுமணன் நடத்தும் கூட்டங்களில் பொன்முடி புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை லட்சுமணன் நடத்தி வருகிறார். இதனால் கடும் அதிருப்தியில் உள்ள பொன்முடியும் இந்த முறை கோட்டைவிட்டால் லட்சுமணன் அமைச்சராக கூட வாய்ப்புண்டு என கணித்து இப்போதே அவரை காலி செய்ய வேண்டும் என சில உள்ளடி வேலைகளை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
சி.வி.சண்முகத்துடன் டீல் பேசிய பொன்முடி?
ஆனால் கட்சி தலைமையும் ஒரு சில காரணங்களால் பொன்முடி மீது அதிருப்தியில் இருந்து வருவதால் புதுரூட்டை பொன்முடி கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது திமுகவை சேர்ந்த பொன்முடியும் அதிமுகவை சேர்ந்த சிவி சண்முகமும் நான் இல்லனா நீ.. நீ இல்லாட்டி நான்.. நம்மள தாண்டி புதுசா ஒருத்தன வர விடலாமா இப்பயே முடிச்சு விட்ரணும் டீலிங் பேசி காயகளை நகர்த்தி வருவதாக முன்னதாகவே தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் தான் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொன்முடி, சிவி சண்முகத்தை பாராட்டி கருத்து தெரிவித்தார்.அதே நேரத்தில் ப்ரஸ்மீட் ஒன்றில் பேசிய சிவி சன்முகமோ பொன்முடியை புகழ்ந்து லட்சுமணனை கடுமையாக சாடி பேசியுள்ளார். இதனையடுத்து லட்சுமணனுக்கு எதிரான முன்னாள் அமைச்சர்களின் கேம் தொடங்கி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.





















