31 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி பாமக போட்ட பிச்சை.! இபிஎஸ்யை வெளுத்து வாங்கிய சி.வி.சண்முகம்
தான் யாருடைய பேச்சை கேட்க மாட்டேன். எனது குடும்பத்தோர் கருத்தை மட்டுமே கேட்பேன், பணத்தை யார் தருவார்களோ அவர்களுடைய கருத்தை மட்டும் கேட்பேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாக சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

தொடர் தோல்வி- சி.வி.சண்முகம் ஆவேசம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு 53 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் அதிமுக தலைமை மீது கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து தவெகவிற்கு கொத்து கொத்தாக நிர்வாகிகள் பல்டி அடித்து வருகிறார்கள். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள மூத்த நிர்வாகியான சி.வி.சண்முகம் இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக என்ற கட்சியானது கேள்வி கேட்டதற்காக தொடங்கப்பட்ட இயக்கம், இன்று இந்த இயக்கம் நிலைமை எப்படி இருக்கிறது என அனைவரும் பார்க்கிறோம். இன்று இந்த இயக்கத்தில் யாரும் கேள்வி கேட்க கூடாது. பேச கூடாது, கருத்தை சொல்ல கூடாது என சர்வாதிகரமாக செயல்பட்ட வருகிறது.
கொத்து கொத்தாக விலகும் அதிமுகவினர்
தான் யாருடைய பேச்சை கேட்க மாட்டேன். எனது குடும்பத்தார் கருத்தை மட்டுமே கேட்பேன், பணத்தை யார் தருவார்களோ அவர்களுடைய கருத்தை மட்டும் கேட்பேன் என செயல்பட்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மோசமான நிலையை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு பிறகும் அனைவரும் உணர்ந்து விட்டார்கள். ஆனால் ஒருத்தரை தவிர, அவர் தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
திமுகவுடன் இணைத்து முதலமைச்சராக வேண்டும் எடுத்த முடிவால் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கொத்து கொத்தாக விலகி வருகிறார்கள், சீட்டு கட்டை போல அதிமுக சரிந்து வருகிறது. ஆனால் எதையும் தெரியாதது போல பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடும் என்ற ரீதியல் செயல்பட்டு வருகிறார். இந்த கட்சிக்காக பலர் பாடுபட்டார்கள். அப்படி உழைத்தவர்கள் இன்று கட்சியை விட்டு செல்கிறார்கள் அவர்களை பார்த்து துரோகி என கூறுகிறார்.
அதிமுக வெற்றிக்கு பாமக தான் காரணம்
இன்னும் தன்னுடைய தவறை உணராமல், தன்னுடைய செயல்பாடுகளை உணராமல் மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டு வருகிறார். தொடர் தோல்வி, அதிமுக மக்கள் மத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தற்போது 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதாக இபிஎஸ் கூறுகிறார். இதில் 31 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி பாமக போட்ட பிச்சை. பாமக கூட்டணி இல்லையென்றால் அரியலூர், கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் வெற்றி பெற்றிருக்க முடியாது. சேலத்தில் இவரும் தப்பி தவறிதான் வெற்றி பெற்றிருப்பார்.
அதிமுக 7 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும். இது தான் உண்மை. இதனை ஒத்துக்கொள்ள வேண்டும். சுயபரிசோதனை செய்ய வேண்டும். காலம் கடந்த பிறகாவது தனது தவறை சரி செய்ய வேண்டும். மீண்டும் எல்லாரும் இணைந்து செயல்படலாம் என கூறினார்கள். ஆனால் எதுவும் நடைபெறவில்லையென சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார்.
Before You Go
TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
ட்ரெண்டிங் செய்திகள்






















