மேலும் அறிய

CV Shanmugam: ’’இது அதிமுக ரத்தம்; தூசிகூட படாது, இதை செஞ்சிட்டுதான் கால் வைப்போம்’’- சூளுரைத்த சி.வி.சண்முகம்

குவிந்த போலீஸார்; அதிமுக அலுவலகத்துக்கு எங்களால் எந்தவித பாதிப்பும் களங்கமும் ஏற்படாது- சி.வி.சண்முகம் சூளுரை

எந்த நிலையிலும் எந்த சூழலிலும் எந்த நேரத்திலும் அதிமுக அலுவலகம் மீது எங்களால் ஒரு தூசி படவோ, சிறிய பாதிப்பு ஏற்படவோ அனுமதிக்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சமடைந்து வருகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றுமொரு அணியும் செயல்பட்டு வருகின்றன. எடப்பாடி அணி தவெகவை எதிர்த்து வரும் சூழலில், எஸ்.பி.வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. 

மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு

இதை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர் அணியில் இருக்கும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவியை அதிரடியாகப் பறித்தார். அவர்களுக்கு ஆதரவான மா.செ.க்களின் பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அதிமுகவின் சி.வி.சண்முகம் தலைமையிலான அணி வருவதாகத் தகவல் வெளியானது . இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்கள் ரத்தம் அண்ணா திமுக ரத்தம்

நாங்கள் அதிமுக அலுவலகம் சென்று கலகம் செய்யப்போவதாகவும் அதற்காக போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள். எங்கள் ரத்தம் அண்ணா திமுக ரத்தம். சாதாரணமான எங்களை, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக மாற்றியது அதிமுக என்னும் மாபெரும் இயக்கம்.

எங்கள் இயக்கத்தின் கோயில்தான் அதிமுக அலுவலகம். அதிமுக தலைமை அலுவலகத்தை எங்கள் கோயிலாகத்தான் நினைக்கிறோம். எந்த நிலையிலும் எந்த சூழலிலும் எந்த நேரத்திலும் அதிமுக அலுவலகம் மீது எங்களால் ஒரு தூசி படவோ, சிறிய பாதிப்பு ஏற்படவோ அனுமதிக்க மாட்டோம்.

எங்கள் உயிர் போன பின்புதான்

நாங்கள் சட்டப்படி அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என்பதை நிரூபித்தபிறகுதான் எங்களின் கால் அங்கே படும். யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. எந்த நிலையிலும் எங்கள் கோயிலுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டோம். எங்கள் உயிர் போன பின்புதான் அதிமுக அலுவலகம் மீது கால் வைக்க முடியும் என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
பாஜக முகத்தை மாற்றினாலும் எடுபடாது! - அண்ணாமலையின் புதிய கட்சி குறித்து கே.பாலகிருஷ்ணன் சாடல்!
பாஜக முகத்தை மாற்றினாலும் எடுபடாது! - அண்ணாமலையின் புதிய கட்சி குறித்து கே.பாலகிருஷ்ணன் சாடல்!
கழகங்கள் மறையட்டும்... நம்ம கொடி பறக்கட்டும்!! கோவையில் அண்ணாமலைக்கு ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்...
கழகங்கள் மறையட்டும்... நம்ம கொடி பறக்கட்டும்!! கோவையில் அண்ணாமலைக்கு ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்...
125 நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கான நிதி 4.1% ஆக குறைப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
125 நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கான நிதி 4.1% ஆக குறைப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
Embed widget