CV Shanmugam : தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
CV Shanmugam Press Meet: தவெகவுடன் கூட்டணி அமையக்ககூடாது என்பதற்காக எப்படியெல்லாம் பேச வேண்டமோ அப்படியெல்லாம் தவெகவை இபிஎஸ் வெளியேற்றினார். இதே போல தேமுதிக, புதிய தமிழகம் கட்சியையும் வெளியேற்றியதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் உட்கட்சி மோதல் தலை தூக்கி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. அந்த வகையில் இபிஎஸ் தலைமைக்கு 22 எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணிக்கு 25 எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 28 மாவட்ட செயலாளர்களை பதவியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவை பிறப்பித்தார். இதன் காரணமாக அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு எழுந்து நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பதவிக்காக சிலர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள்.
மாவட்ட செயலாளர் கூட்டத்தில் என்ன நடந்தது.?
இந்த இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கிடையே கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்கள், தங்களது மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து கையெழுத்து போட்ட படிவங்களை எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பித்துள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக எதிர்ப்பு அணியை சேர்ந்த சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக தொடர் தோல்வியை பெற்றுள்ளது. வாக்கு வங்கி சரிவை நோக்கி சென்றுள்ளது. இந்த நிலையில் இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும். அதிமுகவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு வரவேண்டும். இளைஞர்கள் இயக்கத்தில் இணைத்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதைப்பற்றி ஆலோசிக்க வேண்டும் என சொன்னோம். 2024ஆம் ஆண்டு தேர்தல் முடிவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் 6 நிர்வாகிகள் சந்தித்து பேசினோம்.
தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யவில்லை
மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் வெற்றி பெற முடியாது என கூறினோம். வலுமையான அதிமுகவை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். ஆனால் அனைத்தையும் இபிஎஸ் நிராகரித்தார். செவி கொடுக்க மறுத்தார். அடுத்ததாக தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க மறுத்த காரணத்தால், விலகியவர்கள் சேர்க்க மறுத்த காரணத்தால். வலிமையான கூட்டணியை உருவாக்காத காரணத்தால் தோல்வி அடைந்துள்ளோம்.
தவெகவுடன் கூட்டணி வையுங்கள் என கூறினோம். கூட்டணி அமைந்து விடக்கூடாது என பல நிபந்தனைகளை விதித்தார். கூட்டணி அமையக்ககூடாது என்பதற்காக எப்படியெல்லாம் பேச வேண்டமோ அப்படியெல்லாம் தவெகவை வெளியேற்றினார். இதே போல தேமுதிக, புதிய தமிழகம் கட்சியையும் வெளியேற்றினார். யாரையும் அரவணைக்கவில்லை.
இபிஎஸ் முதலமைச்சராகியிருப்பார்
கட்சியில் சேருங்கள் என ஓபிஎஸ் பல முறை கோரிக்கை விடுத்தார். அடிப்படை உறுப்பினராக இணைய தயார் எனவும் கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்தார். 4 பேரை சேர்க்க மாட்டேன் என இபிஎஸ் உறுதியாக சொன்னார். கட்சியில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து சென்றிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இபிஎஸ் தமிழக முதலமைச்சராக வந்திருப்பார். அல்லது அவரது கண் அசைவில் ஆட்சி அமைந்திருக்கும்.
அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. பொதுக்குழுவை கூட்டுங்கள், விவாதிப்போம், கலந்தாலோசிப்போம் அங்கு என்ன முடிவெடுத்தாலும் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். வலிமையான இயக்கமாக அதிமுக வர வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் எனவே பேசி விவாதிக்க பொதுக்குழு கூட்டுங்கள். இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டாம் என மிரட்டி பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. கையெழுத்து போட மறுத்தால் பதவி பறிக்கப்படும் என அச்சறுத்தி மிரட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த அச்சறுத்தலில் வைத்தால் கட்சி எப்படி வளரும், அணைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.
இபிஎஸ் உத்தரவு செல்லாது
மாவட்ட செயலாளர்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் பயப்பட தேவையில்லை. நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி உத்தரவு செல்லாது. ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட போது இருவரும் தினந்தோறும் கட்சி நிர்வாகிகளை நீக்கி உத்தரவிட்டனர். ஆனால் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மறைவின் போது யார் மாவட்ட செயலாளர்களாக நிர்வாகிகளாக இருந்தார்களோ அவர்களின் கையெழுத்து தான் செல்லும் என என கூறினார். தற்போது எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள புதிய மாவட்ட செயலாளர்கள் செல்லாத ஓட்டு எனவும் சி.வி.சண்முகம் கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















