விஜய் வாக்கு வங்கி: கார்த்திக் சிதம்பரம் பரபரப்பு கருத்து! திமுகவுடன் கூட்டணி குழப்பம் தீருமா?
"தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது, கூட்டணி பலப்படுத்துவது சிதைப்பது, என்ற கேள்விக்கு இடமில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்"

விஜய் அதிக ரசிகர் கூட்டம் இருக்கும் நடிகர் தான் வாக்கு வங்கி பெருமை தவிர சீட்டு பெறுமா என்பது சந்தேகம் தான். ஜி.கே.வாசன் கூறியது போல அனைத்து கட்சியிலிருந்து வாக்கை கணிசமாக விஜய் பெறுவார். விஜயின் கூட்டம் வழக்கமான அரசியல் கூட்டமாக இல்லாமல் சினிமா கச்சேரி போன்று நடைபெறுவதால், கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்படுகிறது என எம்பி கார்த்திக் சிதம்பரம் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் கார்த்திக் சிதம்பரம் சாமி தரிசனம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வழக்கத்தீஸ்வரர் கோவிலில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவதிப்படுபவர்கள் இத்திருக்கோவில் வருகை தந்து விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தால் வழக்கில் இருந்து விடுதலை கிடைப்பது ஐதீகம். அந்த வகையில் அவ்வப்போது அரசியல் கட்சி பிரமுகர்களும் மற்றும் சினிமா பிரபலங்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இன்று குடும்பத்தார்கள் வருகை தந்து தனது கோரிக்கையை கடிதம் எழுதி சாமி இடம் பிராத்தனை மேற்கொண்டு விளக்கேற்றி கடிதத்தை உண்டியலில் போட்டு பிரார்த்தனை மேற்கொண்டார். கோவிலை சுற்றி வலம் வந்து சாமியை வழிபட்டார்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு சரியாகிவிடும்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்ததாவது: திமுக கூட்டணி குறித்து எடப்பாடி கவலைப்பட தேவையில்லை, அதிமுக வழக்கமாக வரும் வாக்கு கூட பாஜகவாவல் வாக்குகள் வராது. எதிர்பார்ப்பு காரணமாக கூட்டணி கட்சியில் தேர்தல் நேரத்தில் சலசலப்புகள் உண்டாகும் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பிறகு சரியாகிவிடும் என தெரிவித்தார்.
கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்த உடனே தமிழக காங்கிரஸ் சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைக்கு, 5 குழு அமைத்து 10 நாட்கள் மேலாகிறது, திமுக தலைமையில் கூட்டணி இன்னும் அமைக்கவில்லை ஆகையால் தான் காலதாமதம் இதுகுறித்து திமுக தலைமை தான் பதில் சொல்ல வேண்டும்.
ஜி.கே.வாசன் சொன்னது உண்மைதான்
விஜய் மிகப்பெரிய ரசிகர் கொண்ட நடிகர், அது வாக்கு வாக்குக்காக மாறும் என்பது ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் சீட்டாக மாறுமா என்பது சந்தேகம் தான். ஜி. கே.வாசன் கூறியது உண்மைதான் விஜய் வருகையால் அனைத்து கட்சி வாக்குகள் சிதறும், விஜய் கணிசமான வாக்கு வாங்கி வாங்குவார் என தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருந்தால் எத்தனை முனை கூட்டணியாக இருந்தாலும் வெற்றி பெறும் என்பது என்னுடைய கணிப்பு. திமுக கூட்டத்திற்கோ, அதிமுக கூட்டத்திற்கோ எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை ஆனால் விஜய் கூட்டத்திற்கு அசம்பாவிதம் நடைபெற்றதால் அவர் கூட்டத்திற்கு அதிகமாக நிபந்தனைகளை விதிக்கப்படுகிறது.
விஜய் கூட்டம் வழக்கமான கட்சி கூட்டம் போல் நடைபெறுவதில்லை, ஏதோ சினிமா கச்சேரி போன்று தான் நடைபெறுகிறது ஆகையால் அதற்கு நிபந்தனைகள் அதிகமாக விதிக்கப்படுவதாக, தெரிவித்தார்.























