மேலும் அறிய

CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?

CM Vijay Cabinet Reshuffle: முதலமைச்சர் விஜய் அமைச்சரவை மாற்றத்திற்கான பட்டியலை தயார் செய்து வருவதாகவும், அதில் ராஜ்மோகனுக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CM Vijay Cabinet Reshuffle: முதலமைச்சர் விஜய் தயாரித்து வரும் புதிய பட்டியலில் புதியவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? என்பது மிகப்பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய்?

முதலமைச்சர் விஜய் அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வந்தாலும், பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ளதால், அது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே முதல் 50 நாட்களுக்குப் பிறகு அமைச்சர்களின் செயல்பாடு தொடர்பாக உளவுத்துறை ரிப்போர்டை கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், தற்போது 100 நாட்களின் முடிவில் இரண்டாவது ரிப்போர்டையும் கேட்டு பெற்றுள்ளாராம். இதிலும் எந்த முன்னேற்றமும் காணாத நபர்கள் தான், அமைச்சரவை பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட உள்ளனராம். இதில் யாருக்கு பதவிகள் பறிபோகும், யாருக்கு கூடுதல் இலாகாக்கள் கிடைக்கும், புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

வெளியேற்றப்படும் மூன்று அமைச்சர்கள்:

வெளியாகியுள்ள தகவலின்களின்படி, பொறுப்புக்கு மதிப்பு சேர்க்கும் வகையில் சரிவர செயல்படாத மூன்று பேரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளாராம். முதலில் அமைச்சர் கீர்த்தனாவுடன் மோதல், அரசு நிகழ்ச்சியின் மேடையிலேயே மாவட்ட ஆட்சியரை எச்சரித்தது, ஜட்டியோடு உட்காரவைத்து அடிப்பேன் என மிரட்டிய ஆடியோ வெளியாகி வைரலானது ஆகியவை ஏற்கனவே அவர் மீதான கரும்புள்ளிகளாக பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திலும் சொதப்பியதால் சமூக நீதி அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது தலைமை அபெசெட் ஆகியுள்ளதாம்.

வாக்காளர்களை சிறுமைப்படுத்தும் விதமாக பேசியது, கட்சி தலைமைக்கே தெரியாமல் டெல்லியில் சில தொழிலதிபர்களை சந்தித்தது, அவரது உறவினர் ஒருவர் துறைக்குள் போடும் ஆட்டம் போன்ற காரணங்களால் கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சர் விஜய் பாலாஜியும் ஹிட்லிஸ்டில் இடம்பெற்றுள்ளாராம். இறுதியாக கடைசி நேரத்தில் தவெகவில் இணைந்து தேர்தலில் வென்று அமைச்சரான ரஞ்சித் குமார், துறையை கையாள முடியாமல் தவித்து வருகிறாராம். சட்டமன்றத்தில் அவர் அளித்த சில பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்த, முதலமைச்சரே அவரது சார்பில் மன்னிப்பு கோரியிருந்தார். இதனால் ரஞ்சித்குமாரையும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.

ராஜ்மோகன் காட்டில் அடைமழை..!

அமைச்சரவை மாற்றங்களை தவிர்த்து சிலருக்கு இலாகாக்களை மாற்றவும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி, ராஜ்மோகன் வசமுள்ள பள்ளிக்கல்வித்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறையை கவனித்து வரும் குமாரிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளதாம். அதற்கு ஈடாக ராஜ்மோகனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறை வழங்கப்பட பரிசீலிக்கப்படுகிறதாம். அதோடு முதலமைச்சர் வசமிருக்கும் நகராட்சி நிர்வாகத்துறையும் கூடுதலாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இலாகா மாறும் அமைச்சர்கள் யார்?

தமிழில் வாசிக்க மிகவும் சிரமப்பட்டு வரும் மரிய வில்சனுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டு, அந்த இலாகாவை கவனித்து வரும் கீர்த்தனாவிற்கு சமூக நலத்துறை வழங்கப்பட வாய்ப்புள்ளதாம். தொழிலாளர் நலத்துறை முகம்மது பர்வேஸிற்கு கைத்தறி மற்றும் நெசவுத்துறை , கனிம வள அமைச்சர் பிரபுவிற்கு வனத்துறை மற்றும் அறநிலையத்றை அமைச்சர் ரமேஷிற்கு செய்தி & விளம்பரத்துறை ஆகியவை கூடுதல் இலாகாவாக ஒதுக்கப்படலாமாம்.

இதையும் படியுங்கள்: KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை

புதியவர்களுக்கு வாய்ப்பா? அறிவிப்பு எப்போது?

சிலர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில், அதனால் ஏற்படும் வெற்றிடத்தை பிடிக்க பல தவெக எம்.எல்.ஏக்களும் தீவிரமாக முயன்று வருகின்றனராம். அதில் ஆர்.எஸ். முருகன், ரெட்டியார்பட்டி நாராயணன், வி.எஸ். பாபு, பாலமுருகன், கனிமொழி மற்றும் கார்த்திகேயன் என பட்டியல் நீள்கிறது. ஆனால், இவர்களில் யாருக்கெனும் வாய்ப்பு கொடுத்து மற்றவர்களை கைவிட்டால், அது கட்சிக்கும் தேவையில்லாத அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதால் புதியதாக யாரையும் அமைச்சரவையில் சேர்க்க தலைமை விரும்பவில்லையாம். அதேநேரம், இது எல்லாம் உத்தேச பட்டியல் தான் எனவும், முதலமைச்சர் விஜய் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் தமிழ்நாடு அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் எனவும் கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!
Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget