சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு இன்று (செப்டம்பர் 4) செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

Continues below advertisement

பங்களிக்காமல் இருக்க முடியுமா:

அப்போது பேசிய அவர்,“ திமுக செல்ல வேண்டிய பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கும் என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னேன். உயிர் பிரியும் வரை மூத்திர சட்டியுடன் மக்களுக்காக போராடிய தந்தை பெரியாரின் உழைப்பு நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். பெரியாரின் சிந்தனை ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் போற்றப்படுகிறது.

பெரியார் உலகமயம் ஆக வேண்டும் என்று உழைத்த வீரமணிக்கு கிடைத்த பரிசு அது. திருச்சியில் உருவாகும் பெரியார் உலகம் மிகச் சிறப்பாக உருவாக வேண்டும் என்று வீரமணி எவ்வாறு உழைக்கிறார் என்பது எனக்கு தெரியும். மிக பிரமாண்டமாக உருவாகி வரும் பெரியார் உலகத்திற்கு திமுக பங்களிக்காமல் இருக்க முடியுமா? எனவே நீங்கள் உருவாக்கி கொண்டிருக்கும் பெரியார் உலகத்திற்கு என்னுடைய ஒரு மாத சம்பளத்தை பெரியார் உலகிற்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

Continues below advertisement

வரப்போவது அரசியல் தேர்தல் கிடையாது:

இது தொடர்பாக டி.ஆர்.பாலு, துரை முருகன், ஆ.ராசா ஆகியோரிடம் சொன்னேன். உடனே அவர்கள் நீங்கள் அறிவியுங்கள் திமுகவின் 126 எம்.எல்.ஏக்கள், மக்களவை  மற்றும் மாநிலங்களவையில் இருக்கும் 31 எம்.பிக்கள் ஆகியோரின் ஒரு மாத சம்பளத்தை சேர்த்து கொடுப்போம் என்று சொன்னார்கள்.  எங்கள் எல்லோருடைய ஒரு மாத சம்பளம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய். அந்த பணத்தை பெரியார் உலகிற்கு கொடுப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம். 

அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகும் ஆணைகள் வழங்கி இருக்கிறோம். பெண்களையும் அர்ச்சகர்கள் ஆக்கியிருக்கிறோம். இந்த நூறு ஆண்டுகளில் நாம் மாற்றத்திற்கான விதைகளை விதைத்திருக்கிறோம். திராவிட மாடல் என்று சொல்வது சிலருக்கு எரிச்சலை தருகிறது. அதனால் தான் தொடர்ந்து அவர்களுக்கு எரியட்டும் என்று திராவிட மாடல் என்று சொல்கிறோம். அடுத்து திராவிட மாடல் 2.0 என்று சொல்ல போகிறோம். வரப்போவது அரசியல் தேர்தல் கிடையாது. தமிழினம் தன்னை காத்துக்கொள்ளக்கூடிய சமுதாயத் தேர்தல்”என்றார்.