மேலும் அறிய

Magalir Urimai Thogai : ‘உரிமைத் தொகையை நிறுத்த பாஜக சதி?’ முறியடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

”தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை ரத்து செய்ய சதி செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அதனை முறியடிக்கும்விதமாக முன்னரே வங்கிகளில் வரவு வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்”

திமுக ஆட்சியின் முக்கிய அறிவிப்பான மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை நிறுத்த மத்திய பாஜக அரசு சதி செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியான நிலையில், அதனை முறியடிப்பதுபோல முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வரும் மூன்று மாதங்களுக்கான தொகையை முன் கூட்டியே மகளிர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்தும், கோடி கால சிறப்புத் தொகையாக கூடுதலாக 2 ஆயிரத்தை அறிவித்தும் அதிரடி காட்டியிருக்கிறார் அவர். மொத்தமாக 5 ஆயிரம் ரூபாய் மகளிர் கணக்கில் இன்று ஒரே நாளில் வரவு வைக்கப்பட்டிருப்பது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு பின்னணி என்ன ? 

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின்போதே அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் திமுக அரசு வழங்குவதுபோன்று மாதந்திர உதவித் தொகை பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீகார் தேர்தலின்போது பண்டிகைக் கால சிறப்பு உதவித் தொகையை மத்திய பாஜக அரசு அறிவித்ததுபோல, அசாம் மாநிலத்தில் வழங்கவும் பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது. அதே நேரத்தில், தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி மாநில அரசு செயல்படுத்தும் உதவித் தொகையை ரத்து செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு முக்கிய தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில் பார்த்தால், தேர்தல் நேரத்தில் மாநில அரசு வழங்கும் நிதி உதவி எதுவும் மக்களுக்கு கிடைக்காது. அதே நேரத்தில் மத்திய பாஜக அரசு அறிவித்த உதவித் தொகை மட்டுமே மக்களின் கைகளுக்கு கிடைக்கும். அதனால், மக்களின் மனநிலை மாறி, வாக்கு சதவிதமே மாறக்கூடிய நிலை உருவாகும். அப்படியான நிலையில், பாஜக அரசின் இப்படியான திட்டத்தை, முன் கூட்டியே மகளிருக்கு உரிமைத் தொகையை வரவு வைத்தும், கூடுதலாக 2 ஆயிரம் கொடுத்தும் முதலமைச்ச மு.க.ஸ்டாலின் முறியடித்திருக்கிறார்.

வழக்குகளை கணித்தும் முதலமைச்சர் முடிவு

அதே நேரத்தில்,  பீகார் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு  ஆயிரம் ரூபாயை வழங்கியதைப் போன்று தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதை நிறுத்தக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. அதில் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு எதிரான தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், அப்படியான ஒரு தீர்ப்பு வந்தாலும் அதை சமாளிக்கும்விதமாகவும் திமுக அரசு இப்படியான ஒரு உத்தியை கையாண்டிருக்கிறது. இதற்கு முன்னோடியாக,  மகராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது பெண்களுக்கு நிதி வழங்கும் திட்டமான’லட்கி பாகின்’ திட்டம் தேர்தல் ஆணையத்தால் நிறுத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மகளிர் உரிமை தொகை எக்காரணம் கொண்டும் தடை பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் உரிமை தொகையை மொத்தமாக அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

1.31 கோடி குடும்பங்களுக்கு உதவும் உரிமைத் தொகை

மகளிர் உரிமை தொகையாக 1.31 கோடி குடும்பங்களுக்கு மாதம் 1000 ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணம் குடும்பங்களின் அன்றாட செலவுகளுக்கு, அவசர தேவைகளுக்கு , குழந்தைகளின் கல்விக்கு பயன்படுவதாக இத்திட்டத்தால் பயன்பெற்று வரும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர். தற்போது வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமைத்திட்டத்தை நிறுத்த மத்திய பாஜக அரசு முயற்சி செய்வதாக கூறி வரும் மூன்று மாதங்களுக்கு மொத்தமாக 3000 ரூபாயும்,  கோடை கால சிறப்பு நிதியாக 2000 ரூபாய் என மொத்தமாக 5000 ரூபாய் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதுமட்டுமின்றி தேர்தலுக்கு பிறகு மாதம் 2000 ரூபாயாக  உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்பு பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jose charles martin Vs Aadhav Arjuna : திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
TVK VIJAY : கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே திமுக முழு கவனம்.! பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே.? விளாசும் விஜய்
கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே திமுக முழு கவனம்.! இப்படி ஒரு ஆட்சி தேவையா.? விளாசும் விஜய்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
Jose charles martin Vs Aadhav Arjuna : திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Embed widget