தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க புறப்படுகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
அமெரிக்காவில் 17 நாட்கள்:
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிறார். அதற்காக , சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது பேசிய அவர்,
ஆகஸ்ட் 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று, புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்திக்க உள்ளேன்.
அமெரிக்கா பயணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது “ தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறோம். அந்த முனைப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.
அமைச்சரவையில் மாற்றமா?
அமெரிக்கா பயணம் முடிந்தவுடன் தமிழ்நாடு அமைச்சரவையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ,மாறுதல் ஒன்றே மாறாது என்றும் WAIT AND SEE என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா பயணம் குறித்து விரிவாக இன்று காலை தெரிவிக்கையில், தேடி வருகின்ற முதலீடுகளைப் போலவே, தேடிச் சென்று முதலீடுகளை ஈர்க்கும் பணியையும், இன்றைய உலளாகவிய பொருளாதாரச் சூழலில் உள்ள போட்டிகளைக் கருத்திற் கொண்டு செயலாற்றி வருகிறது நமது அரசு.
திராவிட மாடல் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன என முன்பு குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்க உங்கள் வாழ்த்துகளுடன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்கிறேன் என தெரிவித்துவிட்டு, அமெரிக்கா புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்