மேலும் அறிய

விஜய் & திரிஷா: நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்! 5000 ரூபாய் அறிவிப்பு பின்னணி என்ன?

"விஜய் திரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டுமென, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்"

சென்னையில் இருந்து விமானம் திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தால் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் இவ்வாறு கூறினார்.

வேடிக்கையாக இருக்கின்றது

அதிகாலையிலேயே வழக்கமாக 5 ஆண்டுகளுக்கு முன்னதாக, சொன்ன பொய்யையே இன்று அதிகாலை மக்கள் தூங்கி எழுந்தவுடன் சொல்லி இருக்கிறார். ஐந்தாயிரம் ரூபாய் தருவேன் என சொல்லி இருக்கிறார். உண்மையாகவே பெரிய வேடிக்கையாக இருக்கின்றது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என சொன்னார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தல் வரை அதாவது 28 மாதங்கள் வரை தரவில்லை அந்த 28 மாதங்களுக்கும் 28 ஆயிரம் ரூபாய் முதல்வர் தருவார் என்று சொன்னால் அதுவும் தரவில்லை. எல்லோருக்கும் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு ஒரு சிலருக்கு மட்டும் தான் கொடுத்தார்கள்.

5000 கொடுத்தது ஏன் எனக் கேள்வி?

இதுவரையிலும் எந்த அரசாங்கமும் எந்த ஒரு அமைச்சரும் செய்யாத ஒரு விஷயத்தை கோடைகால விடுமுறைக்காக ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று சொல்கிறார்கள்.

இந்த ஐந்து வருடங்களில் எத்தனை கோடை காலங்கள் வந்துள்ளது. அப்பொழுதெல்லாம் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்களா இல்லை என கேள்வி எழுப்பினார். இன்றைக்கு இபிஎஸ் 2000 ரூபாய் கொடுப்பேன் என்று சொன்ன பிறகு, 5000 ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். இந்த 5000 ரூபாய் இந்த அறிவுப்புடன் விட்டு விடுவார்களா? வருவதற்கு வாய்ப்பில்லை ஒருவேளை தப்பி தவறி வந்து விட்டால், அடுத்த 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தான் நாம் முதல்வரே பார்க்க முடியும் என தெரிவித்தார்.

மக்களை ஏமாற்றுகிறார்கள்

அறிவித்தது மாநில அரசு, எப்படி மத்திய அரசை குறை சொல்ல முடியும் நீங்களும் முதல்வர் சொல்வதை நம்புகிறீர்களா?. யாரும் அது போன்ற நடவடிக்கையில் ஈடுபடவும் இல்லை. அது போன்ற சிந்தனையும் இல்லை தானாக ஒரு கற்பனையை உருவாக்கி மக்களை ஏமாற்றுகிறார். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் முடக்கி வைப்பது யார் தமிழக முதல்வர் தான் என தெரிவித்தார்.

கரூரில் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்தது 41 பேர் இறந்து போனார்கள் இன்றைக்கு சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருவர் இறந்துள்ளார். இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை‌. குறிப்பாக பெண்களுக்கு கஞ்சா போதைப்பொருள் விற்பனை‌. சொத்து வரி உயர்வு, இவை எல்லாம் மறைப்பதற்காக தான் ஐயாயிரம் ரூபாய் அறிவித்துள்ளார்கள். மகளிர் தமிழ்நாடு மக்கள் இனிமேலும் நம்ப மாட்டார்கள் என தெரிவித்தார்.

திரிஷா வீட்டிலிருந்து வெளியே வரட்டும்

விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசுவேன், பாவம் அவர் அனுபவமே இல்லாதவர் முதலில் வீட்டில் இருந்து அதாவது திரிஷாவின் வீட்டிலிருந்து வெளியே வரட்டும். முதலில் குடும்பத்துடன் உறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்ல வேண்டும். முதலில் வீட்டிலிருந்து வெளியே வரச் சொல்லுங்கள். களத்தில் கவுன்சிலர் கூட இல்லாதவன் அதாவது ஒரு பழமொழி சொல்வார்கள் கூரை ஏறி கோழி கூட பிடிக்க முடியாதவன், வானம் ஏரி வைகுண்டம் போக முடியுமா இதுதான் விஜய்க்கு பதில் என தெரிவித்தார். 

எங்களுடைய கனவு கஞ்சா இல்லாத பெண்களுக்கு தொந்தரவு இல்லாத சட்ட ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். அதுதான் எங்களுடைய கனவு, இதை முதல்வர் நிறைவேற்றுவாரா? இது தான் எங்களுடைய கனவு தமிழக மக்களுக்கான ஒரு கனவு. தேர்தலுக்கான ஒரு ஏமாற்று வேலையாக தான் இந்த ஐந்தாயிரம் ரூபாய் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பீகாரில் என்ன கொடுத்தார்கள் என்பதை முக்கியமில்லை. பீகாரில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. கஞ்சா விற்பனை இல்லை, பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதில் இல்லை. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அங்கே எல்லாம் நன்றாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை, பீகாரில் எல்லாம் நன்றாக இருக்கின்றது என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD AND SILVER RATE TODAY : வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Roundup: அவசரமாக தரையிறங்கிய விமானம், சரிந்த தங்கம் விலை, தவெக கூட்டணி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: அவசரமாக தரையிறங்கிய விமானம், சரிந்த தங்கம் விலை, தவெக கூட்டணி -தமிழகத்தில் இதுவரை
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
125cc Scooters: லோ பட்ஜெட்டில் ஹை சம்பவம்..! கனெக்டட் டெக்குடன் மிரட்டும் 125சிசி ஸ்கூட்டர்கள் - மைலேஜ், விலை

Embed widget