மேலும் அறிய

CM MK Stalin:”இது தான் ரம்ஜான் பரிசா?” இட ஒதுக்கீடு ரத்து! பாஜகவை பொளந்துகட்டிய முதல்வர்

இஸ்லாமிய மக்களுக்கு #AntiMinorityBJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்

மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க, இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள் என தமிழாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம், தெரிவித்துள்ளார். 

இட ஒதுக்கீடு ரத்து:

மகாராஷ்டிர அரசு, மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5% இடஒதுக்கீடு வழங்கும் பழைய உத்தரவை ரத்து செய்துள்ளது. சிறப்பு பிற்படுத்தப்பட்ட பிரிவு-A அல்லது SBC-A உருவாக்கம் மூலம் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்புகள் (SEBC) பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது

.2014 ஆம் ஆண்டு 11 ஆண்டுகளுக்கு முன்பு இடஒதுக்கீடு காலாவதியானதால், இதில் எந்த நன்மையையும் பெறவில்லை என்றாலும், சாதி சரிபார்ப்பு சான்றிதழ்கள் மற்றும் சரிபார்ப்பு சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. கூறப்பட்ட சட்ட நிலைப்பாட்டிற்கு ஏற்ப, தற்போது உள்ள அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.

வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க

அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு. அஜித் பவார் அவர்கள் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க.. 

இது தான் ரம்ஜான் பரிசா?

இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு #AntiMinorityBJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி.

இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்.இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! "தமிழ்நாடா NDA-வா?" எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
TVK Vijay Speech: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா? அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறக்க ஆசை- நெக்குருகிய விஜய்!
TVK Vijay Speech: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா? அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறக்க ஆசை- நெக்குருகிய விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
இந்த பட்ஜெட்டில் இவ்ளோ மைலேஜா? அசத்தல் Yamaha Fascino 125 விலை எவ்ளோ?
இந்த பட்ஜெட்டில் இவ்ளோ மைலேஜா? அசத்தல் Yamaha Fascino 125 விலை எவ்ளோ?
Embed widget