ஆட்சியை இழந்த திமுக

தமிழக சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். திராவிட மாடல் 2.o அமையப்போகுது என திமுக கூறி வந்த நிலையில், எதிர்பாரா திருப்பதாக தவெகவிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது திமுக, இந்த நிலையில் திமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என திமுக தலைமை ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் திமுக தோல்விக்கு காரணம் என்ன என பொதுமக்கள், தொண்டர்கள் வீடியோவாகவோ, வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் என கூறியிருந்தார். இந்தநிலையில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதில் திமுக தோல்விக்கு காரணம் இது தான் என 11 காரணத்தை தெரிவித்துள்ளது.

Continues below advertisement

திமுகவின் தோல்விக்கு காரணம்- ராதாகிருஷ்ணன்

இது தொடர்பாக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு‌.க.ஸ்டாலின் கேட்டு இருந்தார். ஒரு பழைய தி.மு.க காரனாக அதற்கான காரணத்தை கூறுகிறேன்.

1) உதயநிதியை துணை முதல்வராக ஆக்க காட்டிய அவசரம். கலைஞர் போல பொறுமையாக இருந்து இருக்கலாம்.

Continues below advertisement

2) RED GIANT என்னும் பெயரில் சினிமாவை ஆட்சி செய்ய நினைத்தது.

3) RED GIANT நிறுவனத்தை இன்ப நிதியை நிர்வகிக்க செய்தது

4) G Square என்னும் பெயரில் மருமகனை வைத்து Pen ஆட்டம் போட்டது. அவரை பெரிய ராஜ தந்திரிமயாக காட்ட நினைத்தது.

5) அனுபவம் மிக்க அமைச்சர்கள் எல்லாம் செய்தியாளர்களிடமும், பொது மக்களிடமும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது.

6) இந்து மதத்தில் இருக்கின்ற சாதி பேதங்களை எதிர்க்கிறோம் என்று கூறாமல் ஒத்துமொத்தமாக எதிர்க்கிறோம் என்று காட்டிக் கொண்டது!!

7) அதிமேதாவிகள் போல பேசும் செய்தி தொடர்பாளர்களை விவாதங்களில் பங்கேற்க வைத்தது

8)போதைபொருள் நடமாட்டத்தை சரிவரி தவிர்க்க தவறியது!!

9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க தவறியது

10) திமுகவினரை மதிக்காமல், அதிமுகவில் இருந்து வந்தவர்களை நம்பி மதித்து முதல் மரியாதை கொடுத்தது 

11) இறுதி மற்றும் முக்கியமான விஷயம், வைகோவை கூட்டணியில் சேர்த்தது. என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.