✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

CM Nitish Kumar: ”நீங்கள் ஒரு பெண்...உங்களுக்கு எதுவும் தெரியாதா”? சீறிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்...

செல்வகுமார்   |  24 Jul 2024 08:22 PM (IST)

Bihar CM Nitish Kumar Speech: பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கோசமிட்டு கொண்டிருந்ததால் முதலமைச்சர் நிதிஷ்குமார் அமைதியிழந்து கொந்தளிப்புடன் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பீகார் சட்டப்பேரவையில் முதலமைச்சர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினரை பார்த்து , நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு தெரியாதா என கை நீட்டி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

கொந்தளித்த பீகார் சட்டப்பேரவை:

இன்று நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக, எதிர்க்கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு கொண்டிருந்தனர்.

மாநிலத்தின் சட்டத்திருத்த இடஒதுக்கீடு சட்டங்களை, இந்திய அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும் பீகாரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் இடஒதுக்கீட்டில், நிதிஷ் குமாரின் அரசாங்கமானது தோல்வியை சந்தித்துள்ளது என்றும் விமர்சனங்களை தெரிவித்தனர். 

எதிர்க்கட்சியினர் கோசமிட்டதையடுத்து, குறுக்கிட்ட ஐக்கிய ஜனதா தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார், சாதிவாரி இட ஒதுக்கீட்டை பாட்னா உயர்நீதிமன்றம் தள்ளிவைத்த பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நாடியுள்ளோம் என்ற விஷயத்தை விளக்கிய பிறகும், எதிர்க்கட்சிகள், குறிப்பாக ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினர், நிதிஷ் குமாருக்கு எதிராக முழக்கமிட்டு கொண்டே இருந்தனர்.

அமைதியை இழந்த நிதிஷ் குமார்: 

இதனால்,அமைதியை இழந்த அவர், RJD எம்எல்ஏ ரேகா தேவியை நோக்கி "நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவும் தெரியாதா?" என்று கோபத்தை வெளிப்படுத்தினார். 2005 ஆம் ஆண்டிற்கு பிறகு பெண்களை உயர்த்தியது எங்கள் அரசுதான், எங்கள் ஆட்சியில்தான் பெண்கள் உயர்ந்துள்ளனர் என கோபமாக பேசினார். 

கடந்த மாதம், அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு உச்சவரம்பை 65 சதவீதமாக உயர்த்தும் பீகார் அரசின் நடவடிக்கையை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

 

இதையடுத்து பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு "எந்த வழக்கையும் முன்வைக்கவில்லை" என்று மத்திய அரசு கூறியதையடுத்து, JDU தலைமையிலான அரசாங்கம் மற்றொரு பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில், பீகார் முதலமைச்சர் , எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினரை பார்த்து கோபத்துடன் பேசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Published at: 24 Jul 2024 08:21 PM (IST)
Tags: Nitish Kumar CM Reservation Bihar Assembly RJD CONGRESS ujd
  • முகப்பு
  • செய்திகள்
  • அரசியல்
  • CM Nitish Kumar: ”நீங்கள் ஒரு பெண்...உங்களுக்கு எதுவும் தெரியாதா”? சீறிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்...
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.