மேலும் அறிய

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

இந்து மதத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் திராவிட இயக்கங்களின் முடிவை ஆதரிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனையும், வானதி சீனிவாசனையும் கண்டிப்பதாகவும், பாரதிய ஜனதாவின் கொள்கை சித்தாந்தம் மாறி, திராவிட சிந்தாந்தத்திற்கு உடன்படுகிறதா? எனவும் அந்தணர் முன்னேற்றக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது 

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகவும்,  பெண்கள் விருப்பபட்டால் அர்ச்சகர் பயிற்சி தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனும் ஆதரவு தெரிவித்திருந்தனர். திமுக அரசின் முடிவுக்கு தமிழக பாஜக ஆதரவு தெரிவித்துள்ளதற்கு பல்வேறு பிராமணர் சங்கங்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏபிபி நாடு தளத்திற்கு நேர்காணல் அளித்துள்ள அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்ததுடன் பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? என கேள்வி எழுப்பியுள்ளார்

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 34 ஆயிரம் கோயிகளில் வெறும் 4 ஆயிரம் கோயில்களில் மட்டுமே பிராமணர்கள் பூஜை செய்வதாகவும், மீதியுள்ள 30 ஆயிரம் கோயில்களிலும் வன்னியர், தேவேந்திரர், வேளாளர், முத்தரையர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் பூஜைகள் செய்து வருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது என்பது மளிகை கடை பிஸினசா? என கேள்வி எழுப்பி உள்ள அந்தணர் முன்னேற்ற கழகத்தின் ஜெயப்பிரகாஷ், இந்து விரோத கட்சியான திமுக இந்த சட்டத்தை கொண்டு வருவதாகவும் பலநூற்றாண்டு காலமாக ஆகம விதிகளை பின்பற்றி பூஜைகள் நடத்தப்பட்டு வரப்படும் நிலையில் அதில் மாற்றம் கொண்டு வரக்கூடாது எனவும் கூறினார்.

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

கோயில்களில் ஆகம விதிகளின் அடிப்படையில் வழிபாடுகள் நடக்க வேண்டும் எனவும் ஆகம விதிகளின் அடிப்படையில்தான் அர்ச்சகர்கள் நியமனம் இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறி உள்ளதாக தெரிவித்த ஜெயப்பிரகாஷ், இஸ்லாமிய சமுதாயத்திலும் கிறிஸ்தவ சமுதாயத்திலும் பெண்களை உலமாக்களாகவும், போப்-ஆகவும் நியமிக்க முடியுமா? கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்து கோயில்களின் சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்படுத்தி வரும் நிலையில் முஸ்லீம் சமய அறநிலையத்துறை, கிறிஸ்தவ சமய அறநிலையத்துறையை தமிழக அரசு கொண்டு வராதது ஏன்?  கேள்வி எழுப்பிய அவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற நபர்கள் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். 

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

மேலும் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் தாங்கள் பெற்ற தீட்சையை நெருப்பில் போட்டு பொசுக்கியதாகவும், புனிதமான தீட்சையை நெருப்பில் பொசுக்கியவகள் மதச்சார்பு உடையவர்களாக பொறுப்புடன் நடந்து கொள்ள மாட்டார்கள் எனவும் இந்து மதத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் திராவிட இயக்கங்களின் முடிவை ஆதரிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனையும், வானதி சீனிவாசனையும் கண்டிப்பதாகவும், பாரதிய ஜனதாவின் கொள்கை சித்தாந்தம் மாறி, திராவிட சிந்தாந்தத்திற்கு உடன்படுகிறதா? எனவும் அந்தணர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெயப்பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget