சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா அவர்கள் பாரதிய ஜன சங்கத்தின் முதன்மை தலைவர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாய் அவர்களின் பிறந்தநாளை தொடர்ந்து அவருடைய திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் ;
இன்றைய தினம் பாரதிய ஜனதா சங்கத்தின் துவக்கத்திலிருந்து அமைப்பின் போது செயலாளராக பொறுப் பேற்று வழிநடத்தியவர் பண்டிட் தீனதயாள் உப்பாத்யாய் அவர்கள் , 1967 ஆம் ஆண்டு ஜன சங்கத்தின் தலைவராக இருந்தார் , ஒன்றிய தினம் அவருடைய பிறந்த நாள்
1930 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட பிறகு உலகம் முழுவது கேப்பிடல்சத்தை மாற்றி கம்யூனிசம் பயன்படுத்த வேண்டும் என சித்தாந்தங்கள் பறவ தொடங்கியது ஆனால் எந்த நாட்டிலும் கேப்பிட்டல் இசத்தை முழுமையாக செயல்படுத்த முடியாது மேலும் கம்யூனிசம் எந்த நாட்டிலும் முழுமையான உருவில் இருந்ததில்லை இந்த இரண்டு சித்தாந்தங்கள் இருந்த காலகட்டத்தில் ஒருங்கிணைந்த மனிதநேயம் என்கின்ற மாற்று சித்தந்ததை கொண்டு வந்தவர் நமது பண்டிட் தீனதயாள் உப்பாத்யாய் அவர்கள்.
5 கோடி பேர் இணைந்துள்ளனர்
நேற்றைய தினம் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இன்றைய தினம் மட்டும் இரண்டு கோடி நபர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட வேண்டும் என உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இன்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவு நாள்.
சித்தாராமையா பதவி விலக வேண்டும்
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தா ராமைய்யா அவர்களுடைய மனைவியின் பெயரில் பெரும் அளவில் இடம் ஒதுக்கிய விவகாரத்தில் ஆளுநர் அந்த வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி கொடுத்தார். அந்த அனுமதி செல்லாது என்று சித்தராமய்யா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றம் சித்தராமையா அவர்களின் வழக்கினை ஆளுநர் விசாரிக்கலாம் என ஒப்புதல் அளித்தது இதனை தொடர்ந்து சித்திராமையா கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் , கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மிகப்பெரிய போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர் கர்நாடக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் விஜயராகவன் மேற்கொண்ட போராட்டங்களின் பலனாக இன்றைய தினம் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது .
தமிழகத்தில் ஒரு காட்டாச்சி
காங்கிரஸ் ஊழல் குடும்பம் என்று அனைவருக்கும் தெரிந்தது தான். பத்தாண்டு காலமாக 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை 12 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். தமிழகத்தில் ஒரு காட்டாட்சி நடைபெற்று வருகிறது , நேற்றைய தினம் திரௌபதி திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்களின் கைது முறையற்றது , அதையே நீதிமன்றமும் கோரி தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கன்னத்தில் பலத்த அடி கொடுத்துள்ளது , இப்படி இருந்தும் தாமு அன்பரசனை அமைச்சர் பதிவில் இருந்து முதலமைச்சர் நீக்காமல் இருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதில்லை என கூறுகிறார்கள் அதிலும் உண்மை உள்ளது , என்னால் இது தொடர்பாக கருத்துக்கள் கூற முடியாது என்ன நடக்குதோ பார்ப்போம்.
இன்றைக்கு கூட திருநெல்வேலியில் மாணவர்கள் ஆயுதங்களுடன் கல்லூரிக்கு சென்று பிடிக்கபட்டுள்ளனர் , தொடர்ந்து இதுபோன்ற வன்முறைகள் நடைபெற்று வருகிறது. ஆளத் தெரியாத ஒருவர் முதலமைச்சராக உள்ளார்.
அமைச்சர் அனைத்து மதங்களையும் சமமாக பார்ப்பதில்லை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அவர்களுடைய பேட்டை எனக் கூறுவது போல் அவருடைய பேட்டையான திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியரின் மகன் 40 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்ததை பற்றி ஏன் பேசவில்லை ? கிறித்துவ சம்பந்தம் இருப்பதினால் இதைப்பற்றி அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசவில்லையா ?
அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து மதங்களையும் சமமாக பார்ப்பதில்லை , அசோக் நகர் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் மீண்டும் அந்தப் பள்ளியில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்