Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai Quits BJP: தமிழக பாஜகவில் மூத்த தலைவராக இருந்து வந்த அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தேசிய தலைமை அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

அண்ணாமலையும் தமிழக பாஜகவும்
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக தமிழகத்திலும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு காய்களை நகர்த்தியது. அந்த வகையில் அதிரடி அரசியலுக்காக பாஜக மாநில தலைவராக அண்ணாமலையை தேசிய தலைமை நியமித்தது. அண்ணாமலையும் தனது அதிரடி அரசியலால் தமிழகம் முழுவதும் பாஜகவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றார். அண்ணாமலைக்கு பின்னால் இளைஞர்கள் திரள ஆரம்பித்தனர். இந்த நிலையில் தான் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்த நிலையில், பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார்.
அண்ணாமலை அதிருப்தி
இதனால் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, பாஜக நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். தேர்தலிலும் போட்டியிடவில்லை. பிரச்சாரமும் மேற்கொள்ளவில்லை. எனவே பாஜக மீது அதிருப்தியில் இருந்த அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக இருப்பதாகவும் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் அண்ணாமலை வட்டார தகவல்களாக இருந்து வந்தது.
அண்ணாமலை ராஜினாமா
இதற்கு ஏற்ப கடந்த 2ஆம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபியிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனையடுத்து அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இருந்து விலகும் முடிவை தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் தனது சமூக வலைதளத்தின் மூலம் தனது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் தொடர்பாக அறிவிக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார். இந்த நிலையில் அண்ணாமலையில் ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது.
BJP National President Nitin Nabin has accepted the resignation submitted by the Tamil Nadu Ex-State President K Annamalai from the primary membership of the Party. pic.twitter.com/qaQ9gWPL6g
— ANI (@ANI) June 5, 2026
ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பாஜக
இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபி ஏற்றுக்கொண்டார். இதனைடுத்து பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அண்ணாமலை விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Before You Go
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
ட்ரெண்டிங் செய்திகள்






















