”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
அரேபிய நாடுகளில் இருந்த வந்தவர்களை பார்த்து பேச முடியுமா நாம் அமைதியானவர்கள்முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தாலே போதும் கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போய்விடும்.

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அரேபியாவில் இருந்த வந்த மதத்தை இப்படி கேட்க முடியுமா அதற்கான துணிச்சல் இருக்கா? எங்களை சீண்டி பார்க்காதீர்கள் இது தான் உங்கள் மதசார்பின்மையா என்று ஆக்ரோஷமாக பேசியது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
மதுரைக்கு வரவழைத்தது முருகன்
என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன் என்னை வளர்த்தது முருகன் துணிச்சல் தந்தது முருகன் மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கும் அதிகம் , முதற்படை வீடும் ஆறாம் படை வீடும் இங்கு தான் உள்ளது. முருகனின் தாயாரும் முதல் சங்கத்திற்கு தலைமையேற்று மதுரையில் தான் இருந்தார்.மதுரையில் தாய், தந்தை மகன் உள்ளார். மதுரை மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ,மதுரையில் முருகனின் தாயாரும் தந்தையும் இருக்கிறார் முருகனும் இருக்கிறார்.
தேவர் உருவில் முருகன் வாழ்ந்தார்
மேலும் பேசிய அவர் அந்தப் புண்ணியத்தில்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் அவதரித்தார் தென் தமிழகத்தின் மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார் அவர் சிலையருகே மயிலும் வைக்கப்பட்டுள்ளது.தேவர் வடிவில் மனிதன் உருவில் முருகன் வாழ்ந்தார்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முருகன் அவதாரத்தில் வாழ்ந்து மறைந்தார் அவரை தாழ்ந்து பணிந்து வணங்குகிறேன்
நமது நாட்டின் நம்பிக்கைக்கு அழிவில்லை யாராலும் அழிக்க முடியாது, ஆலமரம் போன்றது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஆழமாக உள்ளது.முருகனின் வடிவத்தில் நமது அறம் தொடர்ந்து வளர்க்கிறது எல்லோரையும் சமமாக பார்ப்பதால்,தீயவர்களை வதம் செய்து அநீதியை அழித்தவர், உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமானுக்காக இங்கு வந்துள்ளோம்.
இந்து என்றால் மதவாதியா?
முருகன் மாநாட்டை ஏன் குஜராத்தில் உபியில் நடத்தாலமே என சிலர் கேட்கிறார்கள் இந்த சிந்தனை ஆபத்தானது. 14 வயதிலயே இதனை எதிர்கொண்டவன், கிறிஸ்துவர், இஸ்லாமியராக இருக்கலாம். நீங்கள் இந்துவாக இருந்தாலே இவர்களுக்கு பிரச்சனை ஒருவர் இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்உங்கள் நாகரிகத்தை நாங்கள் கேள்வி கேட்கவில்லை, எங்கள் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் அவமரியாதை செய்யாதீர்கள். என்றார்
துணிச்சல் இருக்கா?
அரேபியாவில் இருந்த வந்த மதத்தை இப்படி கேட்க முடியுமா அதற்கான துணிச்சல் இருக்கா? எங்களை சீண்டி பார்க்காதீர்கள் சாது மிரண்டால் காடு்கொள்ளாது.முருகனை கேள்வி கேட்க அவர்கள் யார்,மற்ற மதத்தை பேச முடியுமா,அரேபிய நாடுகளில் இருந்த வந்தவர்களை பார்த்து பேச முடியுமா நாம் அமைதியானவர்கள். முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தாலே போதும் கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போய்விடும்
நிறத்தை வைத்து அரசியல்:
சிலர் இங்கு நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். நமக்கு நிறத்தில் எந்த பேதமும் இல்லை ,நிறத்தின் வழியாக பார்க்கவில்லை,கருப்பை நிறத்தை வைத்து அரசியல் செய்யும் கூட்டம் உள்ளது. முருகரின் கந்த்சஷ்டி கவசத்தை கிண்டல் செய்தனர்என் கடவுள், கலாச்சாரம், பண்பாட்டை கேலி செய்தனர் கேட்டால் சிலர் இது தான் ஜனநாயகம் என்பார்கள்
முருகனை கேள்வி கேட்க அவர்கள் யார்,மற்ற மதத்தை பேச முடியுமா,அரேபிய நாடுகளில் இருந்த வந்தவர்களை பார்த்து பேச முடியுமா நாம் அமைதியானவர்கள், முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தாலே போதும் கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போய்விடும்.






















