காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த 2000 ஏரிகளை காணவில்லை; ஏரிகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளனர் என அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அன்புமணி நடைப்பயணம்
தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு உளளார். நேற்று திருப்போரூரில் தன்னுடைய நடை பயணத்தை தொடங்கியவர் இன்று இரண்டாவது நாள் நடை பயணத்தை செங்கல்பட்டில் மேற்கொண்டார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து அரசு கலைக் கல்லூரி வழியாக ராட்டினம் கிணறு பகுதி வரை நடந்து சென்று தமிழக மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்த துண்டு பிரசுரத்தை விநியோகித்தார். அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சாலையோர கடை வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அன்புமணி மேடைப்பேச்சு
மேடையில் பேசி அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது: இங்கு நான் வாக்கு கேட்க வரவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு மீண்டும் யார் வேண்டாம் என்பதை சொல்வதற்காக வந்துள்ளேன். திமுக ஆட்சி தமிழ்நாட்டிற்கு போதும். தமிழகத்தில் வியாபாரிகள் இன்று வியாபாரமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவினர் மாமூல் கேட்டு தொந்தரவு செய்கின்றனர் என குற்றச்சாட்டு முன்வைத்தார்.
பட்டை நாமம் போட்டு விட்டார்கள்
அரசு ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தமிழகத்தில் 80 லட்சம் பேர் இருக்கிறார்கள். அந்த வாக்குகளை வைத்து தான் திமுக ஆட்சிக்கு வந்தது ஆனால் திமுக அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பட்டை நாமம் போட்டிருக்கிறார்கள். எனவே அரசு ஊழியர்கள் வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.
ஏரிகளை காணவில்லை
காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு காலத்தில் 3800 ஏரிகள் இருந்தது.. காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் சுமார் 2800 ஏரிகள் இருந்தது. ஆனால் இந்த இரண்டு மாவட்டத்திலும் தற்போது வெறும் 900 ஏரிகள் மட்டும் தான் உள்ளது. இப்போது அந்த ஏரிகள் எல்லாம் எங்கே போனது? செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகமே ஏரிகள் தான் கட்டியிருக்கிறார்கள். அந்த ஏரிகள் மீது தற்போது ஏராளமான அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மணலை திருட தடுப்பணை கட்டவில்லை
தமிழக அரசு தேவையான தடுப்பணைகளை கட்ட மறுக்கிறது காரணம் தடுப்பணைகளை கட்டி நீர் தேக்கி வைத்து விட்டால் பிறகு மணல் கொள்ளை அடிக்க முடியாது அதனால் தடுப்பணைகளை கட்ட மறுக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாட்கள் போனால், தமிழ்நாடு என்பதற்கு பதிலாக கஞ்சா நாடு என்று ஆகிவிடும் அந்த அளவிற்கு கஞ்சா பழக்கம் அதிகமாகிவிட்டது.
தமிழகத்தில் முன்பெல்லாம் பள்ளி வாசலுக்கு வெளியில் இலந்தை படம் வேட்பாளர்கள் ஆனால் தற்போது கஞ்சா அபின் பவுடர் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார்கள் அந்த அளவிற்கு தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது.
நான்கு ஆண்டுகளில் 7000 கொலைகள்
தமிழகத்தில் போதையும் மதுவும் எப்போதும் கிடைக்கிறது ஆனால் சமூக நீதி மட்டும் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் தமிழக முதலமைச்சர் தான் காரணம் அவர் கட்டுப்பாட்டில் இருக்கும். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட்டால் நிச்சயமாக போதை பொருள் நடமாட்டம் குறைந்து விடும். நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 7000 கொலைகள் நடைபெற்று உள்ளது அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது என தெரிவித்தார்.
சமூக நீதிக்கு துரோகம் செய்த திமுக
ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுத்துவிட்டால் பெண்களுக்கான உரிமை கிடைத்து விடுமா, என ஆவேசமாக கேள்வி எழுப்பிய அன்புமணி பெரியார் அண்ணா கலைஞரின் வாரிசு என்று பேசுவார்கள் ஆனால் சமூக நீதி ஒரு கிலோ விலை எவ்வளவு என்று கேட்பார்கள். திமுக சமூகநீதிக்கு துரோகம் செய்துவிட்டது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவரை சுற்றி அமைச்சர்கள் இல்லை அவர்கள் வியாபாரிகள்.
"பழைய அம்பாசிடர் மாடல்"
திமுக அரசு கொடுத்த 541 வாக்குறுதிகளில் வெறும் 60 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு 90% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்லி வருகிறார்கள். என்ன பெரிய திராவிட மாடல். அது பழைய அம்பாசிட்டர் மாடல், அதனை ஓரம் கட்ட வேண்டும்
உங்களிடம் நான் வாக்கு கேட்டு வரவில்லை, பெண்கள் இளைஞர்கள் மீனவர்கள் மாணவர்கள் வியாபாரிகள் தொழிலாளர்கள் ஆகியோரின் உரிமையை மீட்பதற்காக இந்த நடைவணத்தை மேற்கொண்டு உள்ளேன் பொதுமக்கள் இந்த உரிமைகளை மீட்டெடுக்க எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.