மேலும் அறிய
தமிழகத்தில் ஏன் சாதி சண்டை வருகிறது தெரியுமா? அன்புமணி ராமதாஸ் மதுரையில் கொடுத்த விளக்கம் !
மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து மனதை மாற்றி விடுவார்கள். - அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.

அன்புமணி ராமதாஸ்
Source : whatsapp
6 மாதம் என்னிடம் ஆட்சியை கொடுத்தால் 6 நாளில் நான் போதை பொருள் புழக்கத்தை ஒழித்து விடுவேன் என மதுரையில் அன்புமணி ராமதாஸ் சவால்.
60 ஆண்டுகால திராவிட கட்சிகள் ஆண்டுள்ளது.
தமிழக மக்களின் உரிமைகளை மீட்க, தலைமுறை காக்க எனும் தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் 100 நாள் நடைபயணத்தின் ஒரு பகுதியாக மதுரை கோ.புதூர் பேருந்து நிலையத்தில் பொதுகூட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றி பேசுகையில் "
ஏன் சாதி சண்டை வருகிறது
இப்போது திமுக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். மதுரை என்றால் என்ன வரலாறை அவர்களால் சொல்ல முடியும்? மீனாட்சியம்மன், கள்ளழகர் என்று மட்டும் தானே சொல்ல முடியும். திமுக ஆட்சியில் மதுரையின் வரலாறு என்ன? கோனார் மெஸ், கறி தோசை. திமுக ஆட்சியில் மதுரையின் வரலாறு என்ன?, தென்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலனோர் வேலை வாய்ப்பை தேடி சென்னை செல்கிறார்கள். காரணம் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. வேலை இல்லாத காரணத்தினால் தான் ஜாதி சண்டை வருகிறது. சென்னையில் சாதி சண்டை உள்ளதா? வேலை படிப்பு தொழில் இல்லாத காரணத்தினால் தான் சாதி சண்டை வருகிறது. திமுக பேசுவது தான் சமூக நீதி? ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளது?, மதுரையில் ஓடும் வைகை நதி சாக்கடையாக சென்று கொண்டிருக்கிறது. இயற்கை கொடுத்த வைகை நதியை காப்பாற்ற துப்பில்லாத ஆட்சியாக திமுக உள்ளது. வைகை நதியை காப்பாற்ற நான் மேகமலை வரை சென்றேன்.
தேர்தல் நேரத்தில் பணமூட்டை கொண்டு வருவார்கள்
இப்போதுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனதில் தைரியம் இல்லை எதுவும் தெரியாது. தேர்தல் நேரத்தில் பணமூட்டை கொண்டு வருவார்கள். நீங்களும் எல்லாம் மறந்துவிடுவீர்கள். பின்னர் 1000, 2000 வாங்கி கொண்டு ஒட்டு போட்டு வருத்தப்படுவீர்கள். பெண்கள் தயவு செய்து திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள். யார் வர வேண்டும் என்பதை விட யார் வர கூடாது என்ற முடிவை எடுங்கள். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு 1000 காரணங்கள் உள்ளது. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் உண்டா?, எனது பதவி காலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மண்ணில் அன்று திமுக ஆட்சி மூன்றாண்டு காலம் ஆட்சியில் இருந்தும் அந்த திட்டத்தை கொண்டு வரவில்லை. அப்போதே கொண்டு வந்திருந்தால் இந்தியாவிலேயே பெரிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்டி முடித்து இருப்பார்கள். இதற்கு காரணம் திமுக தான் எவ்வளவு பெரிய துரோகம் செய்து இருக்கிறது.
10 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்க வேண்டும்
சமூக நீதி பற்றி ஸ்டாலினிடம் கேட்டால் தலையை சொறிவார். 2 மாதத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தலாம். மேடைக்கு மேடை சமத்துவம், சாதி ஒழிப்பு என்றும் சொல்லும் திமுக சாதியை வைத்து தானே அரசியல் செய்கிறது?, சாதி வாரி கணக்கெடுப்பு என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று நடத்த வேண்டியது தானே?, தமிழ்நாட்டிற்கு 4.5 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கும் ஸ்டாலின், 2 கோடி செலவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா?, எல்லா மாநிலத்திலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி விட்டார்கள். ஆனால் ஸ்டாலினிடம் கேட்டால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த எனக்கு அதிகாரம் இல்லை என்று ஏமாற்றி வருகிறார். சமூக நீதியை பற்றி பேசுவார்கள் தவிர எதையும் செய்ய மாற்றங்கள். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாதது தான் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய மன்னிக்க முடியாத துரோகம். மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து மனதை மாற்றி விடுவார்கள். திமுக நோக்கம் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது. என் நோக்க அடுத்த தலைமுறையினரை காப்பாற்றுவது. அரசு ஊழியர்கள், பெண்கள்,இளைஞர்கள் விவசாயிகள் ஒரு ஓட்டை கூட திமுகவுக்கு போடாதீர்கள்" என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement





















