Minister Nirmal Kumar : திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசிய தவெக அமைச்சர்..! வைரலாகும் நிர்மல் குமாரின் பழைய வீடியோ
Minister Nirmal Kumar old video : திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து புகைப்படம் வெளியிட்டது தொடர்பாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திருவள்ளுவருக்கு காவி உடை
திருவள்ளுவர் பொதுவாக வெள்ளை உடையில் சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக காவி உடைப் படங்கள் வெளியாகி தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த திமுக ஆட்சியின் போதும் அப்போது ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்த படத்தை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் தற்போதும் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தன.
திருவள்ளுவருக்கு காவி உடை புகைப்படம்
இந்த நிலையில் திருவள்ளுவர் படம், எப்போதும் வெள்ளை நிறத்தில் காட்சி அளித்த நிலையில், கடந்த 2019 ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் தான் முதன் முதலில் திருவள்ளுவரை காவி உடையுடன் திருநீறு, ருத்ராட்சம் போன்றவற்றுடன் படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிந்து வெளியிட்டது யார் என்ற வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வகையில், தற்போது ஆளுங்கட்சியான தவெக அமைச்சரவையில் உள்ள எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கடந்த 2029ஆம் ஆண்டு பாஜகவில் ஐடி பிரிவில் இருந்த போது அவரது தலைமையின் கீழ் தான் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
சி.டி.ஆர்.நிர்மல் குமார் பழைய வீடியோ
இது தொடர்பாக சி.டி.ஆர்.நிர்மல் குமார் யூடியூப் சேனல் ஒன்றிக்கு அப்போது அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் சி.டி.ஆர்.நிர்மல் குமார், திருவள்ளுவரை காவியில் காட்டுகிறோம். இது தான் ஒரிஜினல் என சொல்லுகிறோம். இது ஒரு சின்ன விஷயம். இதற்கு இவ்வளவு ரியாக்ட் செய்து சண்டை செய்ய வேண்டியதில்லை என கூறும் வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
யார் இந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார்.?
இந்த நிலையில் தற்போது தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சி.டி.ஆர்.நிர்மல் குமார் யார் என்பதை தற்போது பார்க்கலாம். பாஜகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர், 2019 முதல் 2023 வரை தமிழ்நாடு பாஜக மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு தலைவர் பொறுப்பு வகித்தார். 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது கட்சி மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
அடுத்தாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர் சமூக ஊடகப் பிரிவு இணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வகித்தார்.இதனையடுத்து அடுத்த ஒரு வருடத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















