பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி சேலம் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, பழனிசாமி ஆதரவாளர் சிலர் பன்னீர்செல்வம் அணிக்கு வருகிறார்கள் என்ற தகவல் கசிந்த காரணத்தினாலேயே இன்று மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது. 21-ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என்று பன்னீர்செல்வம் அறிவித்த காரணத்தினால்தான் பழனிசாமியும் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்.
என்னைப் பற்றி பல்வேறு விமர்சனங்களை கூறிவரும் ஜெயக்குமாருக்கு சிந்து அபிவிருத்தி இயக்கம் என ஆரம்பிக்க கடிதம் அனுப்ப உள்ளேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என பேசி உள்ளார்கள். அவருக்கு துணிச்சல் இருந்தால் பாரதிய ஜனதா கட்டுப்படுத்த முடியாது என தைரியமாக சொல்ல வேண்டும் என்றோர். சி.வி.சண்முகம் பிஜேபியுடன் கூட்டணி இல்லை, பாரதிய ஜனதா கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக கூறியுள்ளார். இதே சி.வி.சண்முகம் நல்ல மனநிலையில் இருந்து போது பாஜக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியால் தான் தோல்வியடைந்தோம் என்று கூறினார். 21 ஆம் கூட்டம் என பன்னீர்செல்வம் அறிவித்த பின்பு அறிவிக்கப்பட்ட கூட்டம்தான் இன்று நடைபெற்றது. பன்னீர்செல்வத்தை பார்த்து பயந்த பழனிசாமி பணம் வந்த பிறகு திமிராக பேசுகிறார். அம்மா பொருளாளர் பதவி கொடுத்தபோது 10 லட்சம் மட்டுமே அதிமுக கணக்கில் இருந்தது. அதனை 4 கோடியாக மாற்றிக் காட்டியவர் ஓபிஎஸ் என்றார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமியை சிறையில் அடைத்தால் அதிமுக காப்பாற்றப்படும். கொடநாடு வழக்கில் அளிக்கப்பட்ட சாட்சிகளை நிரூபிக்கும் இடத்தில் முதல்வர் இருக்கிறார், மக்கள் உங்களை எதிர்பார்க்கிறார்கள். நாங்களும் அதை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் அரசு தாமதமாக செயல்படுகிறது என்று கூறினார். ஒரே ஒரு இடத்தில் இடைத் தேர்தல் வந்தால் பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரில் யாருக்கு செல்வாக்கு என்பது தெரிந்துவிடும். அதிமுக பிளவுபட்டு கிடந்தால் தேர்தல் என்பதே திமுகவுக்கு பொருட்டல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பெங்களூரு நீதிமன்றத்தில் 100 கோடி ரூபாய் அபராதமாக விதித்தது. அப்போது அம்மாவின் பெயரைச் சொல்லி எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர் உடனெருந்தவர்கள் 400 முதல் 500 கோடி வரை ஹோட்டலில் அம்மாவின் பெயரைச் சொல்லி பலரிடம் வசூல் செய்தனர் என்றார்.
கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தர்மயுத்தத்தை கைவிட்டார் பன்னீர்செல்வம். ஒருங்கிணைப்பாளர் என்ற மகுடம் பன்னீர்செல்வத்திற்கே கிடைக்கும்; ஜெயலலிதா வகித்த பதவியை ஒருபோதும் ஏற்கமாட்டோம். சேலம் மாவட்டத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி மிகவும் வலுவாக உள்ளது. எனவே சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து எங்களது பயணத்தை தொடங்க உள்ளோம் என்று கூறினார். மேலும் ஓபிஎஸ் தலைமையில் சேலம் மாவட்டத்தில் மிகப்பிரம்மாண்டமான கூட்டத்தினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் கூட்டமானது நடைபெறும் என கூறினார். கொலைக்குற்றத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வரலாறு கொலை குற்றத்திலேயே முடியும் வரை ஓயமாட்டோம் என்று கூறினார்.